Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை‌யி‌ல் உயர்வு!

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2008 (10:46 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர ்‌த ்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன. சென்செக்ஸ் 15,000 ஐ தாண்டியது.

காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 389.48 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 15,350.55 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 87.55 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4590.40 ஆக இருந்தது.

கச்சா எண்ணெய் விலை தொடர்நது குறைந்து வருகிறது. நேற்று 1 பீப்பாய் 119 டாலராக குறைந்தது. இத்துடன் அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும், இன்று ஆசிய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

இந்திய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.30 மணி நிலவரப்படி 1570 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 407 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 45 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 435.54 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 15,396.61 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 102.90 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4605.75 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 106.56 சுமால் கேப் 90.45 பி.எஸ ்.இ. 500- 136.22 புள்ளி அதிகரித்தது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நடந்த வர்த்தகத்தில் ரூ.4,202.83 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.4,600.50 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இவை நேற்று ரூ.397.67 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,342.35 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,054.95 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இவை நேற்று ரூ.287.40 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஆகஸ்ட் மாதத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 1,492.74 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.65,258.75 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பாவில் நேற்று எல்லா மற்ற பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண் அதிகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 134.30 புள்ளி குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 331.62, நாஸ்டாக் 64.27, எஸ் அண்ட் பி500-35.87 புள்ளி அதிகரித்தது.

இன்று ஆசிய நாடுகளின் எல்லா பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை நிலவியது.

ஜப்பானின் நிக்கி 351.93, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 37.22, இந்தோனேஷியாவின் ஜகார்த்தா காம்போசிட் 11.28, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 36.64, தைவானின் தைவான் வெயிட் 185.44, சீனாவின் சாங்காய் காம்போசிட் 49.66 புள்ளி அதிகரித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

Show comments