Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 79, நிஃப்டி 18 புள்ளிகள் சரிவு!

Webdunia
திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (17:28 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது சரிந்த குறைந்த குறியீட்டு எண்கள், நாள் முழுவதும் எல்லா பிரிவுகளிலும் ஏற்ற இறக்கமாக இருந்தது.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 78.82 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,577.87 ஆக குறைந்தது.

அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 18.20 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4395.35 ஆக குறைந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,845 பங்குகளின் விலை அதிகரித்தது, 805 பங்குகளின் விலை குறைந்தது, 69 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 99.98 சுமால் கேப் 123.24, பி.எஸ ். இ.100- 14.65, பி.எஸ்.இ 200-7.06, பி.எஸ்.இ.-500 28.33 புள்ளிகள் அதிகரித்தது.

இன்று நடந்த வர்த்தகத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள், மின் உற்பத்தி, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 90.80, பாங்க் நிஃப்டி 30.50, சி.என்.எக்ஸ். 500- 6.90 சி.என்.எக்ஸ்.மிட் கேப் 28.75, மிட் கேப் 50- 44.85 புள்ளிகள் அதிகரித்தது.

சி.என்.எக்ஸ். ஐ.டி 10.50, சி.என்.எக்ஸ்.100- 7.40, சி.என்.எக்ஸ். டிப்டி 19.80 புள்ளி குறைந்தது.


நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் ஹெச்.சி.எல் டெக் 6.10%, செயில் 4.39% கிரேசம் 3.27% ரிலையன்ஸ் பெட்ரோலியம் 3.11%, ஏ.பி.பி 2.87% ரான்பாக்ஸி 2.45% விலை அதிகரித்து.

டி.சி.எஸ் 3.01%, டாடா கம்யூனிகேஷன்ஸ் 2.96%, பி.பி.சி.எல் 2.57 %,ரிலையன்ஸ் 2.40% பி.ஹெச்.இ.எல் 2.20% விலை குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments