Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் உயர்வு!

Webdunia
புதன், 30 ஜூலை 2008 (10:57 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 260 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 14,051.24 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 59 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4248.55 ஆக உயர்ந்தது.

இன்று இந்தியாவில மட்டுமல்லாது ஆசிய பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை நிலவுகிறது. ரிசர்வ் வங்கி நேற்று வட்டி விகிதம், ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரித்து. இதனால் வட்டி விகிதம் அதிகரித்து தொழில், வர்த்தக வளர்ச்சி பின்னடைவு அடையும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலையில் உள்ள பங்குச் சந்தைகளின் முன்னேற்றம், தொடர்ந்து இருக்குமா என்ற சந்தேகமும் மார்க்கெட் வட்டாரங்களில் நிலவுகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.32 மணி நிலவரப்படி 1405 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 384 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 42 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 283.85 புள்ளி உய‌ர்‌ந்து குறியீட்டு எண் 14,075.39 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 64.50 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4254.35 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 96.45, சுமால் கேப் 104.61, பி.எஸ ்.இ. 500- 107.30 புள்ளி அதிகரித்தது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நடந்த வர்த்தகத்தில் ரூ.2,207.80 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,746.07 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இவை நே‌ற்று ரூ.538.27 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 811.16 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,065.75 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இவை நேற்று ரூ.254.59 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஜூலை மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 4,470.40 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.63,632.40 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பாவில் நேற்று சில பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தும், சிலவற்றில் அதிகரித்தும் இருந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 6.60 புள்ளி அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 266.48 நாஸ்டாக் 55.40 எஸ் அண்ட் பி500-28.82 புள்ளி அதிகரித்தது.

இன்று ஆசிய நாடுகளின் எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண் அதிகரித்தது.

தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 15.02, தைவானின் தைவான் வெயிட் 75.01, இந்தோனேஷியாவின் ஜகார்த்தா காம்போசிட் 3.01, ஹாங்காங்கின் ஹாங்சாங் 462.13, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 34.02, சீனாவின் சாங்காய் காம்போசிட் 18.49, ஜப்பானின் நிக்கி 188.72 புள்ளி அதிகரித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments