Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் சரிவு!

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (11:05 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. ஆனால் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து அடிக்கடி மாறி வந்த குறியீட்டு எண்கள் 10.45 மணிக்கு பிறகு எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைய ஆரம்பித்தன.

ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை இருந்தது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 124 டாலராக குறைந்தது.

இது போன்ற சாதகமான நிலை இருந்தாலும், இன்று பங்குச் சந்தை அதிக மாறுபாடுகளுடன் இருக்கும் என்றே தெரிகிறது. நேற்று அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் கணிசமாக பங்குகளை வாங்கின. அத்துடன் குறுகிய கால முதலீட்டாளர்களும் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் செலுத்தினர். இன்று இவர்கள் இலாபம் பார்க்க பங்குகளை விற்பனை செய்யும் வாய்ப்பு உள்ளது. இதனால் இன்று பங்குச் சந்தையில் பங்கு விலைகள் அடிக்கடி மாறுவதற்கு வாய்ப்புள்ளது

மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 79 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 15,021.64 ஆகவும், நிஃப்டி 30 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4506.45 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.44 மணி நிலவரப்படி 1199 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 818 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 64 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.45 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 87.36 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,854.92 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 5.45 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4471.35 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 12.36 பி.எஸ ்.இ. 500- 0.39 புள்ளி குறைந்து இருந்ததது. சுமால் கேப் 45.08 புள்ளி அதிகரித்தது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.5,749.67 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.4,443.11 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.1,306.56 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 1,902.08 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,795.30 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.875.22 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஜூலை மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 2,916.86 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.62,078.86 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பாவில் நேற்று எல்லா பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 85.80 புள்ளி அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 29.88 நாஸ்டாக் 21.92 எஸ் அண்ட் பி500- 5.19 புள்ளி அதிகரித்து இருந்தது.

இன்று ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் இந்தோனிஷியா மலேசியா, சிங்கப்பூர் தவிர மற்றவைகளில் குறியீட்டு எண் அதிகரித்தது.

தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 31.00, ஹாங்காங்கின் ஹாங்சாங் 130.98, ஜப்பானின் நிக்கி 195.83, சீனாவின் சாங்காய் காம்போசிட் 21.75 புள்ளி அதிகரித்தது. சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 0.98, இந்தோனிஷியாவின் ஜகார்தாத காம்போசிட் 0.31 புள்ளி குறைந்தது

நேற்று மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ஆர்வமுடன் பங்குகளை வாங்கின. ஆனால் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இருப்பில் இருந்த பங்குகளை விற்பனை செய்து இலாபம் பார்த்தன. அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து தப்பியதாலும் குறிப்பாக காப்பீடு, வங்கி துறையில் பொருளாதார சீர்திருத்தம் நிறைவேற்றப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்தால், பங்குச் சந்தை சுறுசுறுப்படைந்தது. அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை இறக்கம், பெரிய நிறுவனங்கள் டாலரையும் அந்நியச் செலாவணி சந்தையில் விற்பனை செய்தன. இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65 பைசா அதிகரித்தது.

பங்குச் சந்தையில் நேற்று ஏற்பட்ட மாற்றம் தொடர்ந்து நிலைக்குமா என்பத கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த முன்னேற்றம் தற்காலிகமானது தான் என்று தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

Show comments