Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 838, நிஃப்டி 237 புள்ளிகள் உயர்வு!

Webdunia
புதன், 23 ஜூலை 2008 (16:46 IST)
பங்குச் சந்தைகளில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று புத்துணர்ச்சி காணப்பட்டது. காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், குறையாமல் நாள் முழுவதும் அதிகரித்தன. எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் எவ்வித பின்னடைவும் இல்லாமல் அதிகரித்தன.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 838.08 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 14,942.28 ஆக உயர்ந்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இந்திய நேரப்படி மாலை 4.40 மணியளவில் பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ.100- 68.30 புள்ளிகள் அதிகரித்தது.

அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 236.70 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4476.80 ஆக உயர்ந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 2,270 பங்குகளின் விலை அதிகரித்தது, 436 பங்குகளின் விலை குறைந்தது, 53 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 269.91 சுமால் கேப் 276.22 பி.எஸ ். இ.100- 453.97 பி.எஸ்.இ. 200-104.73 பி.எஸ்.இ-500 320.14 புள்ளிகள் அதிகரித்தது.

இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி, மின் உற்பத்தி, ரியல் எஸ்டேட், உலோக உற்பத்தி , கர்வோர் பொருட்கள், பொதுத் துறை பிரிவு குறியீட்டு எண்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 515.55, சி.என்.எக்ஸ். ஐ.டி. 109.90, பாங்க் நிஃப்டி 549.45, சி.என்.எக்ஸ்.100- 236.55, சி.என்.எக்ஸ். டிப்டி 223.80, சி.என்.எக்ஸ். 500- 194.90, சி.என்.எக்ஸ். மிட் கேப் 322.65 மிட் கேப் 50- 144.80 புள்ளிகள் அதிகரித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments