Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 456 புள்ளி சரிவு!

Webdunia
வெள்ளி, 11 ஜூலை 2008 (18:37 IST)
மும்ப ை பங்குச் சந்த ை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் அடுத்த பத்தாவது நிமிடத்திலேயே சரிய துவங்கின. எல்லா பிரிவு பங்குகளின் விலைகளிலும் அதிக மாற்றம் இருந்தது. நண்பகல் 12 மணிக்கு பிறகு சரியத் துவங்கின.

பங்குச் சந்தைகளை பணவீக்கம் அதிகரிப்பு, மே மாதத்திற்கான தொழில் துறை உற்பத்தி குறைந்ததற்கான புள்ளி விபரம், அரசியல் நெருக்கடி ஆகியவை பாதித்தன.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 456.39 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 13,469.85 ஆக சரிந்தது.

ஆசிய பங்குச் சந்தைகளில் ஜப்பான், சீனா தவிர மற்றவைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் பாதகமான போக்கு நிலவியது. மாலை 4.45 மணி நிலவரப்படி பிரிட்டனில் எப்.டி.எஸ்.இ.-100 50.60 புள்ளி குறைந்தது.

அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 113.20 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4049 ஆக சரிந்ததது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 995 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,655 பங்குகளின் விலை குறைந்தது, 61 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 109.86 சுமால் கேப் 95.58 ப ி. எஸ ். இ. 100- 219.22, பி.எஸ்.இ 200-49.64, பி.எஸ்.இ.-500 151.05 புள்ளி குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 193.31, வாகன உற்பத்தி பிரிவு 36.23, ரியல் எஸ்டேட் பிரிவு 75.93 தகவல் தொழில் நுட்ப பிரிவு 281.77 உலோக உற்பத்தி பிரிவு 247.46 நுகர்வோர் பொருட்கள் பிரிவு 565.67 பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 106.11 மின் உற்பத்தி பிரிவு 104.72 வங்கி பிரிவு 120.49 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 244.61 சி.என்.எக்ஸ். ஐ.டி. 264.65 பாங்க் நிஃப்டி 78.30 சி.என்.எக்ஸ்.100- 113.95 சி.என்.எக்ஸ். டிப்டி 71.40 சி.என்.எக்ஸ். 500- 91.45 சி.என்.எக்ஸ். மிட் கேப் 124.50 மிட் கேப் 50- 56.55 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 8 பங்கு விலை அதிகரித்தது, 42 பங்கு விலை குறைந்தது.

நிஃப்டி ஜீனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 5 பங்குகளின் விலை அதிகரித்தது, 45 பங்கு விலை குறைந்தது.

சி.என்.எக்ஸ். ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 20 பங்குகளின் விலையும் சரிந்தது.

பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில் 1 பங்கின் விலை அதிகரித்தது, 11 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 4 பங்குகளின் விலை அதிகரித்தது, 16 பங்குகளின் விலை குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

Show comments