டாலர் மதிப்பு 6 பைசா உயர்வு!

Webdunia
செவ்வாய், 8 ஜூலை 2008 (16:22 IST)
அந்நியச் செலவாணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 6 பைசா அதிகரித்தது.

ஆசிய பங்குச் சந்தையில் இன்று காலையிலேயே குறியீட்டு எண்கள் குறைந்தன. அதே போல் இந்திய பங்குச் சந்தையிலும் குறியீட்டு எண்கள் சரிந்தன.

ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனால் பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரை அதிக அளவு வாங்கின. இதனால் அந்நியச் செலவாணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து டாலரின் மதிப்பு அதிகரித்தது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.43.40 / 43.42 ஆக இருந்தது.

பிறகு வர்த்தகம் நடக்கும் போது இந்திய ரூபாயின் மதிப்பு சிறிது அதிகரித்தது.

1 டாலர் ரூ.43.36 / 43.37 என்ற அளவில் விற்பனையானது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 4 பைசா அதிகம்.

நேற்று இறுதி விலை ரூ.43.30 / 43.31.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொடுத்த காச திருப்பி வாங்கிக்கோங்க!.. கமல் அதிரடி அறிவிப்பு...

கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..

பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...

இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...

எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...

Show comments