Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் சரிவு!

Webdunia
செவ்வாய், 8 ஜூலை 2008 (10:38 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 395 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 13,130.87 ஆகவும், நிஃப்டி 107 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 3923.10 ஆக இருந்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் குறைந்தன. குறிப்பாக ரியல்எஸ்டேட், வங்கி, மின்உற்பத்தி, பெட்ரோலிய நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு பாதிக்கப்பட்டது. எல்லா பங்குகளின் குறியீட்டு எண்களும் 2 விழுக்காடு வரை குறைந்தன.

ஆசிய பங்குச் சந்தைகளும் இன்று காலை சரிவை சந்தித்தன. நேற்று அமெரிக்க பங்குச் சந்தையின் சரிவும் காரணம். அதிகரித்து வரும் பணவீக்கம், வங்கி வட்டி உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள மந்த நிலை பங்குச் சந்தையை பாதித்து வருகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.15 மணி நிலவரப்படி 329 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1253 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 28 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.15 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 400.67 புள்ளி சரிந்து குறியீட்டு எண் 13,125.32 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 115.10 புள்ளி சரிந்து குறியீட்டு எண் 3914.90 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 113.21, சுமால் கேப் 99.76 பி.எஸ ்.இ. 500- 144.52 புள்ளி குறைந்தது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,668.60 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,108.17 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.439.57 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.743.71 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.667.81 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.75.90கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஜூலை மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 1,133.15 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.60,295.16 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று எல்லா நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண் அதிகரித்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 99.90 புள்ளி அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 56.58, எஸ்.அண்ட்.பி 500 -10.59, நாஸ்டாக் 2.06 புள்ளி குறைந்தது.

இன்று காலை 10 மணியளவில், ஆசிய நாடுகளில் ஹாங்காங், சிங்கப்பூர்,இந்தோனிஷியா, தென்கெரியா, பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண் குறைந்தது.

தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 20.28, சீனாவின் சாங்காய் காம்போசிட் 45.16, ஜப்பானின் நிக்கி 291.52, ஹா காங்கின் ஹாங்சாங் 718.83, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 52.91 புள்ளி குறைந்தது.

சீனாவின் சாங்காய் காம்போசிட் 4.68 புள்ளி அதிகரித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments