சென்செக்ஸ் 72 புள்ளிக‌ள் உயர்வு!

Webdunia
திங்கள், 7 ஜூலை 2008 (16:55 IST)
மும்ப ை பங்குச் சந்த ை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன. காலையில் இருந்து பங்குகளின் விலையில் மாற்றம் இருந்தது. மதியம் சுமார் 2.45 மணிக்கு பிறகு குறியீட்டு எண்கள் குறைய துவங்கின. கடைசி பத்து நிமிடங்களில் சிறிது அதிகரித்தது. இதனால் தான் சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்தன.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 71.99 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 13,525.99 ஆக உயர்ந்தது.

ஆசிய பங்குச் சந்தைகளில் இந்தோனேஷியா தவிர மற்றவைகளில் குறியீட்டு எண் அதிகரித்து இருந்தன.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் சுவிட்சர்லாந்து தவிர மற்ற பங்குச் சந்தைகளில் சாதகமான போக்கு நிலவியது. மாலை 4.35 மணி நிலவரப்படி பிரிட்டனில் எப்டிஎஸ்இ-100 30.70 புள்ளி அதிகரித்தது.

அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 14 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4030 ஆக உயர்ந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1853 பங்குகளின் விலை அதிகரித்தது, 188 பங்குகளின் விலை குறைந்தது, 65 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 61.57, சுமால் கேப் 143.34, ப ி. எஸ ். இ. 100-49.53, ப ி. எஸ ். இ. 200-11.87, ப ி. எஸ ். இ. 500- 42.26 புள்ளி அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 141.80, சி.என்.எக்ஸ். ஐ.டி 91, பாங்க் நிஃப்டி 84.90, சி.என்.எக்ஸ்.100- 23.20, சி.என்.எக்ஸ். டிப்டி 5, சி.என்.எக்ஸ். 500- 29.65, சி.என்.எக்ஸ். மிட் கேப் 42.40, மிட் கேப் 50- 16.65 புள்ளி அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 2.03 புள்ளி குறைந்தது.

உலோக உற்பத்தி பிரிவு 220.35, வாகன உற்பத்தி பிரிவு 76.55, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 21.87, பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 68.37, மின் உற்பத்தி பிரிவு 14.22, வங்கி பிரிவு 71.96, ரியல் எஸ்டேட் பிரிவு 30.34, தகவல் தொழில் நுட்ப பிரிவு 107.23 புள்ளி அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 35 பங்கு விலை அதிகரித்தது, 14 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

நிஃப்டி ‌ஜூனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 39 பங்குகளின் விலை அதிகரித்தது, 11 பங்குகளின் விலை குறைந்தது.

சி.என்.எக்ஸ். ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 14 பங்குகளின் விலை அதிகரித்தது, 5 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 11 பங்குகளின் விலை அதிகரித்தது. 1 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 36 பங்குகளின் விலை அதிகரித்தது, 14 பங்குகளின் விலை குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களுக்கு ஏன் பதவி கொடுக்கல?.. செங்கோட்டையனிடம் கேள்வியெழுப்பிய தவெகவினர்....

கரூர் சம்பவம்!. புஸ்ஸி ஆனந்த, ஆதவ் அர்ஜுனாவை வச்சு செய்த சிபிஐ அதிகாரிகள்!....

யாருடன் கூட்டணி?.. ஜனவரி 5ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...

எந்த கேஸ்னாலும் எங்ககிட்ட வாங்க!. போலி ஆவணம் மூலம் ஜாமின் வாங்கி கொடுத்த கும்பல்!..

2026 புத்தாண்டின் முக்கிய நிதி மாற்றங்கள்: ஒரு பார்வை

Show comments