Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் உயர்வு!

Webdunia
வெள்ளி, 4 ஜூலை 2008 (11:28 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 41 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 13,135.34 ஆகவும், நிஃப்டி 20 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 3945.60 ஆக இருந்தது.

ஆசிய பங்குச் சந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண்கள் குறைந்தும், சிலவற்றில் அதிகரித்தும் இருந்தன.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து பதட்ட நிலை அதிகரித்து வருகிறது. இதனால் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்தது. 1 பீப்பாய் 145 டாலராக உயர்ந்தது.

அத்துடன் இன்று நண்பகலில ் பணவீக்கம் பற்றிய புள்ளி விபரங்களை மத்திய அரசு அதிகாரபூர்வமாக வெளியிடும். பணவீக்கம 11.63 முதல் 12 விழுக்காடாக அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தால் அரசியல் அரங்கில் எழுந்துள்ள நிச்சயமற்ற நிலை போன்றவற்றின் தாக்கம் பங்குச் சந்தையில் இருக்கும்.

இதனால் காலையில் பங்குச் சந்தையில் புள்ளிகள் அதிகரித்தாலும், இதே நிலை தொடர்வதற்கு வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.35 மணி நிலவரப்படி 367 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1414 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 30 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 138.76 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 13,232.87 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 26.85 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 13,232.87 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 29.13, சுமால் கேப் 11.69 பி.எஸ ்.இ. 500- 37.03 புள்ளி அதிகரித்தது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,090.22 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,697.14 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.606.92 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,116.88 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.590.78 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.526.10 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஜூலை மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 1,065.93 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.60,227.93 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று எல்லா நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண் அதிகரித்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 50.30 புள்ளி அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 73.03, எஸ்.அண்ட்.பி 500 -1.30 அதிகரித்தது. நாஸ்டாக் 6.08 புள்ளி குறைந்தது.

இன்று காலை 10.45 மணியளவில், ஆசிய நாடுகளில் ஹாங்காங், இந்தோனிஷியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண் அதிகரித்து இருந்தது.

ஜப்பான், சீனா, பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தன.

தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 20.28, சீனாவின் சாங்காய் காம்போசிட் 41.23, ஜப்பானின் நிக்கி 106.71 புள்ளி அதிகரித்தது.

ஹாங்காங்கின் ஹாங்சாங் 234.55, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 13.22 புள்ளி குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments