Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 703 புள்‌ளிக‌ள் உயர்வு!

Webdunia
புதன், 2 ஜூலை 2008 (17:38 IST)
மும்ப ை பங்குச் சந்த ை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. ஆனால் சிறிது நேரத்திலேயே குறைய தொடங்கியது.

ஆனால் 1 மணிக்கு பிறகு நிலைமை சீராகி, எல்லா பிரிவு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் அதிகரிக்க துவங்கின.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 702.94 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 13,664.62 ஆக உயர்ந்தது.

ஆசிய பங்குச் சந்தைகளில் காலையில் சீனா, சிங்கப்பூர் பங்குச் சந்தைகளில் காலையில் குறியீட்டு அதிகரித்து இருந்தன. ஆனால் மாலையில் எல்லாவற்றிலும் குறியீட்டு எண் குறைந்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் சாதகமான போக்கு நிலவியது. மாலை 5 மணி நிலவரப்படி பிரிட்டனில் எப்டிஎஸ்இ-100 84.19 புள்ளி அதிகரித்தது.

அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 196.60 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4093.35 ஆக உயர்ந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1586 பங்குகளின் விலை அதிகரித்தது, 1094 பங்குகளின் விலை குறைந்தது, 57 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 169.44 சுமால் கேப் 121.69 ப ி. எஸ ். இ. 100-354 ப ி. எஸ ். இ. 200-80.33 ப ி. எஸ ். இ. 500- 241.95 புள்ளி அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 359.70, சி.என்.எக்ஸ். ஐ.டி 99.55, பாங்க் நிஃப்டி 292.90, சி.என்.எக்ஸ்.100- 190.85, சி.என்.எக்ஸ். டிப்டி 173.60, சி.என்.எக்ஸ். 500- 149.20, சி.என்.எக்ஸ். மிட் கேப் 173.45, மிட் கேப் 50- 100.90 புள்ளி அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 461.57, உலோக உற்பத்தி பிரிவு 744.83, வாகன உற்பத்தி பிரிவு 88.58, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 573.83, பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 206.71, மின் உற்பத்தி பிரிவு 123.27, வங்கி பிரிவு 336.04, ரியல் எஸ்டேட் பிரிவு 515.26, தகவல் தொழில் நுட்ப பிரிவு 227.80, புள்ளி அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 44 பங்கு விலை அதிகரித்தது, 6 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி ‌ஜூனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 45 பங்குகளின் விலை அதிகரித்தது, 5 பங்குகளின் விலை குறைந்தது.

சி.என்.எக்ஸ். ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 16 பங்குகளின் விலை அதிகரித்தது, 4 பங்குகளின் விலை குறைந்தது.

பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 12 பங்குகளின் விலையும் அதிகரித்தது.

நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 48 பங்குகளின் விலை அதிகரித்தது, 2 பங்குகளின் விலை குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments