Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை 600 புள்ளிகள் சரிவு!

Webdunia
வெள்ளி, 27 ஜூன் 2008 (12:22 IST)
மும்பை: கடந்த இரண்டு நாட்களாக முன்னேறிவந்த மும்பை, தேசப் பங்குச் சந்தைகளில் இன்று மீண்டும் சரிவு ஏற்பட்டது.

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 536 புள்ளிகள் சரிந்து 14,000 புள்ளிகளுக்குக் கீழ் குறைந்தது.

இன்று காலை வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்திலேயே 535.97 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் குறியீடு 13,885.85 புள்ளிகளாக குறைந்தது.

தேசியப் பங்குச் சந்தையின் என்.எஸ்.சி. நிஃப்டி குறியீட்டு எண் 159 புள்ளிகள் எரிந்து 4,156.85 புள்ளிகளாக குறைந்துள்ளது.

அமெரிக்க மற்றும் சீனா, ஹாங் காங் உள்ளிட்ட ஆசியச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியை அடுத்து அன்னிய முதலீட்டாளர்கள் பெரும் அளவிற்கு பங்குகளை விற்கத் துவங்கியதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

பகல் 11.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 619 புள்ளிகள் சரிந்து 13,801 ஆக குறைந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments