தங்கம், வெள்ளி விலை உய‌ர்வு!

Webdunia
திங்கள், 23 ஜூன் 2008 (15:09 IST)
மும்பையில் இன்று காலை பார் வெள்ள ி விலை கிலோவுக்கு ரூ.20ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.80ம் அதிகரித்தது.

மற்ற நாட்டு சந்தைகளில் இருந்து வந்த தகவல்களால், நகை உற்பத்தியாளர்கள் அதிக அளவு தங்கம் வாங்கியதால் விலை உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நியூ யார்க் சந்தையிலும் வெள்ளிக் கிழமை தங்த்தின் விலை 1 அவுன்ஸ் 904.25 / 905.25 டாலராக அதிகரித்தது. இதற்கு முந்தைய நாள் விலை 901.35 / 902.75 டாலர்.

இதே போல் பார் வெள்ளியின் விலை 17.36 / 17.43 டாலரில் இருந்து 17.39 / 17.45 டாலராக உயர்ந்தது.

மற்ற நாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில், டாலரின் மதிப்பு குறைந்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்ய துவங்கி உள்ளனர்.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,655
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,600
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,555.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

Show comments