Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 65 புள்ளி உயர்வு.

Webdunia
வியாழன், 12 ஜூன் 2008 (17:56 IST)
மும்ப ை பங்குச் சந்த ை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் சரிந்தன. ரிசர்வ் வங்கி நேற்று வட்டி விகிதத்தை குறைத்தது. இத்துடன் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

அத்துடன் காலையிலேயே மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன. இதனால் இந்திய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்களும் குறைந்தன.

காலையில் சென்செக்ஸ் 403 புள்ளிகளும் நிஃப்டி 114 புள்ளிகளும் குறைந்தது காலையில் இருந்து மிக மெதுவாகவும், ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த குறியீட்டு எண்கள் மதியம் 3 மணிக்கு பிறகு சிறிது அதிகரித்தன.

ஏப்ரல் மாதத்திய தொழில் உற்பத்தி 7 விழுக்காடாக அதிகரித்தது, ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் சாதகமான போக்கு ஆகியவற்றால் மதியத்திற்கு பிறகு மும்பை தேசிய பங்குச் சந்தை சிறிது முன்னேறியது.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 64.88 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 15,250.20 ஆக உயர்ந்தது.

இன்று ஆசிய பங்குச் சந்தைகளில் காலையிலேயை பாதகமான நிலை இருந்தது. மாலையில் ஹாங்காங்கின் ஹாங்செங் 303.74, சீனாவின் சாங்காய் காம்போசிட் 66.71, ஜப்பானின் நிக்கி 294.88, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 42.31 புள்ளி குறைந்தது.

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய பிறகு தொடங்கும் ஐரோப்பிய நாடுகளின் எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. மாலை 5 மணி நிலவரப்படி பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ. 100- 51.60 புள்ளிகள் அதிகரித்தது.

மாலை வர்த்தகம் முடிந்த போது தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 15.75 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4539.35 ஆக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,481 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,109 பங்குகளின் விலை குறைந்தது, 84 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 32.78, சுமால் கேப் 58.60, ப ி. எஸ ். இ. 100-42.02, ப ி. எஸ ். இ. 200-10.09, ப ி. எஸ ். இ. 500- 31.69 புள்ளிள் அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 38, பாங்க் நிஃப்டி 28.10, சி.என்.எக்ஸ்.100- 16, சி.என்.எக்ஸ். டிப்டி 21.30, சி.என்.எக்ஸ். 500- 13.25, சி.என்.எக்ஸ். மிட் கேப் 46.10, மிட் கேப் 50- 33.10 புள்ளி அதிகரித்தன.
ஆனால் சி.என்.எக்ஸ். ஐ.டி. 2.90 புள்ளிகள் குறைந்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,768.09 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின, ரூ.3,985.36 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,158.45 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின, ரூ.611.98 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.52,877.99 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 141.70, மின் உற்பத்தி பிரிவு 3.54, பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 18.48, வங்கி பிரிவு 19.47 உலோக உற்பத்தி பிரிவு 108.84 நுகர்வோர் பொருட்கள் பிரிவு 88.22, ரியல் எஸ்டேட் 17.24 புள்ளி அதிகரித்தது.

தகவல் தொழில் நுட்ப பிரிவு 11.61 வாகன உற்பத்தி பிரிவு 3.76 புள்ளி குறைந்தது.


தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 29 பங்கு விலை அதிகரித்தது, 21 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி ஜீனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 29 பங்குகளின் விலை அதிகரித்தது, 21 பங்குகளின் விலை குறைந்தது.

சி.என்.எக்ஸ். ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 11 பங்குகளின் விலை அதிகரித்தது, 9 பங்குகளின் விலை குறைந்தது.

பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 10 பங்குகளின் விலை அதிகரித்தது. 2 பங்குகளின் விலை குறைந்தது

நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 35 பங்குகளின் விலை அதிகரித்தது, 14 பங்குகளின் விலை குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments