Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைக‌ளி‌ல் சரிவு!

Webdunia
திங்கள், 9 ஜூன் 2008 (11:07 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சரிந்தது. ரியல் எஸ்டேட், மின் உற்பத்தி நிலையங்களின் பங்கு விலைகள் அதிக அளவு குறைந்தன.

காலை 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 380 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 15,192.74 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 117 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4,511.30 ஆக இருந்தது.

உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 139.12 டாலராக அதிகரித்தது. ஜி-8 என்று அழைக்கப்படும் வளர்ந்த நாடுகள் மற்றும் ஆசியாவில் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, சீனா, தென் கொரியா ஆகிய 11 நாடுகளின் எரிசக்தி துறை அமைச்சர்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த, இதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என நேற்று வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் ஒபெக் என அழைக்கப்படும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தேவை இல்லை என்று கூறியுள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்து, 1 பீப்பாய் 150 டாலர் வரை உயரும் என கருதப்படுகிறது.

இந்தியாவில் ஏற்கனவே அரசு வெளியிட்ட புள்ளி விபரப்படி பணவீக்கம் அதிக அளவு இருக்கின்றது. சென்ற வாரம் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் அடுத்த வாரங்களில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும்.

இதன் எதிரொலியாக இன்று காலையில் பங்குகளை விற்கும் போக்கு அதிக அளவு காணப்பட்டது. இதனால் தொடர்ந்து எல்லா பிரிவு குறியீட்டு எண்கள் சரிந்து வருகின்றன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் 10.30 மணி நிலவரப்படி 183 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1782 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 19 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 470.12 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 15,102.06 ஆக குறைந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 143.95 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4483.85 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 267.17, சுமால் கேப் 321.66, ப ி. எஸ ்.இ. 500- 211.94 புள்ளி குறைந்தது.

வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,760.42, கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,683.77 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.76.65 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1.089.55 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.689.40 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.400.15 மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.50,405.88 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 394.64, எஸ் அண்ட் பி 500- 43.37, நாஸ்டாக் 75.38 புள்ளி குறைந்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 234.50, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 62.74 புள்ளி குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments