Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 448 புள்ளிகள் சரிவு!

Webdunia
புதன், 4 ஜூன் 2008 (17:45 IST)
மும்ப ை பங்குச் சந்த ை, தேசிய பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே ஏற்ற இறக்கத்துடன் இருந்த குறியீட்டு எண்கள் மதியம் 1 மணிக்கு பிறகு சரிய துவங்கின.

இன்று மாலை வர்த்தகம் முடியும் போது சென்செக்ஸ் 448 புள்ளிகளும், நிஃப்டி 130 புள்ளி குறைந்தன.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் காலையில் ஹாங்காங், சிங்கப்பூர், தென்கொரியாவின் பங்கு சந்தைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. ஆனால் ஹாங்காங், சீனா பங்குச் சந்தைகளில் குறைந்து இருந்தது.

மாலையில் வர்த்தகம் முடியும் போது, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் பங்குச் சந்தையின் குறியீட்டு எண்களும் குறைந்தன.

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய பிறகு தொடங்கும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ.-114.40 புள்ளி குறைந்தது.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 447.77 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 15,514.79 ஆக குறைந்தது.

மாலை வர்த்தகம் முடிந்த போது தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 130.30 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4,585.60 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 676 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,967 பங்குகளின் விலை குறைந்தது, 76 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 149.93, சுமால் கேப் 162.03, ப ி. எஸ ். இ. 100-273.69, ப ி. எஸ ். இ. 200-62.78, ப ி. எஸ ். இ. 500- 195.17 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 301.70, சி.என்.எக்ஸ். ஐ.டி. 106.35, பாங்க் நிஃப்டி 187.55, சி.என்.எக்ஸ்.100- 131.30, சி.என்.எக்ஸ். டிப்டி 108.65, சி.என்.எக்ஸ். 500- 112.25, சி.என்.எக்ஸ். மிட் கேப் 188.70, மிட் கேப் 50- 100.10 புள்ளி குறைந்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,900.14, கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,920.84 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.980.14 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.717.65 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.47,865.39 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 352.98, வாகன உற்பத்தி பிரிவு 144.46, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 405.43, மின் உற்பத்தி பிரிவு 121.83, ரியல் எஸ்டேட் 337.05, பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 129.76, வங்கி பிரிவு 186.88, தகவல் தொழில் நுட்ப பிரிவு 114.74, உலோக உற்பத்தி பிரிவு 808.93 புள்ளி குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 1 பங்கின் விலை அதிகரித்தது, 49 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி ஜீனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 4 பங்குகளின் விலை அதிகரித்தது, 46 பங்குகளின் விலை குறைந்தது.

சி.என்.எக்ஸ். ஐ.டி. பிரிவில் உள்ள 20 பங்குகளில் 2 பங்குகளின் விலை அதிகரித்தது, 18 பங்குகளின் விலை குறைந்தது.

பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 12 பங்குகளின் விலையும் குறைந்தது.

நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 2 பங்குகளின் விலை அதிகரித்தது, 48 பங்குகளின் விலை குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments