Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் சரிவு!

Webdunia
செவ்வாய், 20 மே 2008 (10:55 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, குறியீட்டு எண்கள் சரிந்தன. தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன. மும்பை பங்குச் சந்தையில் மிட் கேப், சுமால் கேப் உயர்ந்து இருந்தது.

காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 122 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,312.32 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 24 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 5,133.70 ஆக அதிகரித்தது.

இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் சரிந்தன. நேற்று அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் உயர்ந்து இருந்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் 1,030 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 832 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 62 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 137.78 புள்ளி சரிந்து குறியீட்டு எண் 17,311.78 ஆக குறைந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின ் நிஃப்டி 34.10 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 5123.60 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 2.22, சுமால் கேப் 56.85 புள்ளி அதிகரித்தது. ஆனால் ப ி. எஸ ்.இ. 500- 27.50 புள்ளிகள் குறைந்தன.

வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,867.15 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,391.28 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.475.87 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1.082.16 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.690.06 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.392.10 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 41.36, எஸ் அண்ட் ப ி-1.28 புள்ளிகள் அதிகரித்தது. ஆனால் நாஸ்டாக் 12.76 புள்ளி குறைந்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் நேற்று குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 124.70 புள்ளி அதிகரித்தது.

ஹாங்காங்கின் ஹாங்செங ் 483.77, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 8.51, ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 86.17, தென் கொரியாவின ் சியோல ் காம்போசிட ் 20.22, சீனாவின் சாங்காய் காம்போசிட் 43.25 புள்ளி குறைந்து இருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments