Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம், வெள்ளி விலை உயர்வு!

Webdunia
திங்கள், 19 மே 2008 (14:47 IST)
மும்பை தங்கம ், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.130ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.70 அதிகரித்தது.

ஆசிய நாட்டு சந்தைகளில் இருந்து வந்த தகவல்களை அடுத்து உள்நாட்டு வர்த்தகர்கள் தங்கம், வெள்ளியை வாங்குவதில் ஆர்வம் காட்டியதால், இதன் விலை உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஒரு மாதத்தில் முதன் முறையாக சிட்னியில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 900 ஆஸ்‌ட்ரேலிய டாலராக அதிகரித்தது.

இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 903.30 அமெரிக்க டாலராக அதிகரித்தது. (நியுயார்க் வெள்ளி இறுதி விலை 903.30 டாலர்).

இதற்கு முன் ஏப்ரல் 24ஆ‌ம் தேதி 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 900 டாலருக்கும் மேல் அதிகரித்து 906.30 டாலராக உயர்ந்தது. நியுயார்க் முன்பேர சந்தையில் ஜூன் மாதம் விற்பனை செய்வதற்கான தங்கத்தின் விலை 905.30 டாலராக அதிகரித்தது.

முன்பேர சந்தையில் விலை அதிகரித்துள்ளதால், தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து, இதன் விலை 920 முதல் 925 டாலராக அதிகரிக்கும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் அமைப்பான ஒபேக், இதன் உற்பத்தியை அதிகரிக்க மறுத்து வருகிறது.

இதனால் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 126.60 டாலராக அதிகரித்தது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. இதே மாதிரி வெள்ளியில் முதலீடு செய்யும் போக்கு‌ம் அதிகரிக்கிறது. வெள்ளியின் விலை 1 அவுன்சிற்கு 9 செண்ட் அதிகரித்து, இதன் விலை 16.99 டாலராக அதிகரித்துள்ளது.

இன்று விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,530
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,470
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.23,945
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments