Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 58 புள்ளிகள் உயர்வு!

Webdunia
வெள்ளி, 16 மே 2008 (17:37 IST)
மும்ப ை பங்குச் சந்த ை, தேசிய பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தன.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 58.11 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,411.65 ஆக முடிந்தது.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தம் தொடங்கும் போது, சீனா, ஹாங்காங், கொரியா பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன. மற்றவற்றில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன.

ஆசிய பங்குச் சந்தைகளில் மாலையில் வர்த்தகம் முடியும் போது காலையில் அதிகரித்த ஜப்பான் பங்குச் சந்தையில் நிக்கி, மாலையில் குறைந்தது. அதே போல் காலையில் சரிந்த ஹாங்காங் தென் கொரிய பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள், மாலையில் அதிகரித்தன.

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய பிறகு, தொடங்கும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையில் இன்று சாதகமான நிலை இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 42.45 புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 5157.70 ஆக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1547 பங்குகளின் விலை அதிகரித்தது, 1137 பங்குகளின் விலை குறைந்தது, 84 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 43.47, சுமால் கேப் 66.03, ப ி. எஸ ். இ. 500- 44.74 புள்ளி அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 104.35, பாங்க் நிஃப்டி 136.45, சி.என்.எக்ஸ்.100- 43.25, சி.என்.எக்ஸ். டிப்டி 12.95, சி.என்.எக்ஸ். 500- 38.80, சி.என்.எக்ஸ். மிட் கேப் 26.60, மிட் கேப் 50- 31.50 புள்ளி அதிகரித்தது.
ஆனால் சி.என்.எக்ஸ். ஐ.டி 16.35 புள்ளி குறைந்தது.

நேற்று இரண்டு பங்குச் சந்தைகளிலும ் நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,165.10 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,438.22 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,462.48 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,099.37 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.40,793.52 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நுகர்வோர் பொருட்கள் பிரிவு 0.71%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 0.75%, மின் உற்பத்தி பிரிவு 0.89%, வாகன உற்பத்தி பிரிவு 0.57%, உலோக உற்பத்தி பிரிவு 1.90%, ரியல் எஸ்டேட் 0.02%, பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 0.40%, வங்கி பிரிவு 1.54% அதிகரித்தது.

அதே நேரத்தில் தகவல் தொழில் நுட்ப பிரிவு மட்டும் 0.42% குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 32 பங்குகளின் விலை அதிகரித்தது. 18 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி ஜீனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 32 பங்குகளின் விலை அதிகரித்தது. 15 பங்குகளின் விலை குறைந்தது. 3 பங்கின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 9 பங்குகளின் விலை அதிகரித்தது. 11 பங்குகளின் விலை குறைந்தது.

பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், எல்லா பங்குகளின் விலையும் குறைந்தது.

நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 32 பங்குகளின் விலை அதிகரித்தது. 17 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கின் விலையில் மாற்றம் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments