Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் உயர்வு!

Webdunia
வியாழன், 15 மே 2008 (11:28 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, குறியீட்டு எண்கள் உயர்ந்தன.

காலை 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 160 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,138.62 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 45 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5056.25 ஆக அதிகரித்தது.

இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் முன்னேற்றம் காணப்படுகிறது. அத்துடன் நேற்று அமெரிக்கா, ஐரோப்பிய சந்தைகளிலும் சாதகமான நிலை இருந்தது. இதனால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் உயர வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள் கருதுகின்றனர். நண்பகலுக்கு பிறகு இலாப கணக்கு பார்க்க தொடங்கினால், குறியீட்டு எண்கள் குறைய வாய்ப்பு உள்ளது. அதிக அளவு குறைய வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் 1,594 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 606 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 63 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 245.65 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 17,223.65 ஆக உயர்ந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின ் நிஃப்டி 66.95 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5011.75 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 74.92, சுமால் கேப் 74.92, ப ி. எஸ ்.இ. 500- 88.57 புள்ளிகள் அதிகரித்தன.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,623.16, கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,538.04 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.85.12 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1.109.49 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.899.08 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.310.41 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 66.20, நாஸ்டாக் 1.58 புள்ளிகள் அதிகரித்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 4.10 புள்ளி அதிகரித்தது.

இன்று காலை ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் ஹாங்காங் தவிர மற்றவைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன.

தென ் கொரியாவின ் சியோல ் காம்போசிட ் 42.72, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 18.31, ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 225.63, சீனாவின் சாங்காய் காம்போசிட் 20.99 புள்ளி அதிகரித்து இருந்தது.

ஆனால் ஹாங்காங்கின ் ஹாங்செங ் 132.15 புள்ளி குறைந்து இருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments