Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 108 புள்ளிக‌‌ள் சரிவு!

Webdunia
செவ்வாய், 13 மே 2008 (18:03 IST)
மும்ப ை பங்குச் சந்த ை, தேசிய பங்குச் சந்தையில் காலையில் வர்‌த்தகம் தொடங்கியதில் இருந்து அதிகரித்து வந்த குறியீட்டு எண்கள், நண்பகல் சுமார் 1.30 மணியளவில் குறைய‌த் துவங்கின.

இந்திய பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் குறைந்தது. ஆனால் காலையில் இந்திய பங்குச் சந்தை போன்றே, குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்த மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய பிறகு, தொடங்கும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையில் பி‌ன்னடைவு காணப்பட்டது. நேற்று ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை இருந்தது.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 108.04 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 16,752.86 ஆக குறைந்தது. .

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 54.85 புள்ளி குறைந்து, குறியீட்டு எண் 4757.80 ஆக முடிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1410 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,305 பங்குகளின் விலை குறைந்தது, 69 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 10.90 புள்ளி அதிகரித்தது ஆனால் சுமால் கேப் 5.85, ப ி. எஸ ். இ. 500- 34.22 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 10.50, சி.என்.எக்ஸ். மிட் கேப் 1.25, பாங்க் நிஃப்டி 10.40, மிட் கேப் 50- 7.40 புள்ளி அதிகரித்தது.

ஆனால் சி.என்.எக்ஸ். டிப்டி 49.60, சி.என்.எக்ஸ். ஐ.டி 35.70, சி.என்.எக்ஸ்.100- 44.50, சி.என்.எக்ஸ். 500-24.80 புள்ளி குறைந்தது.

நேற்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,322.01, கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,532.58 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.909.89 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.668.88 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.41,659.46 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.28,771.49 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.76%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 0.46%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 2.56%, பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 0.32,%, மின் உற்பத்தி பிரிவு 0.18%, வாகன உற்பத்தி பிரிவு 0.39%, குறைந்தன.

வங்கி பிரிவு 0.43%, உலோக உற்பத்தி பிரிவு 0.64%, ரியல் எஸ்டேட் 0.13% அதிகரித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments