Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிவு!

Webdunia
செவ்வாய், 6 மே 2008 (18:08 IST)
மும்ப ை பங்குச் சந்த ை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறைந்த குறியீட்டு எண்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல், இறுதி வரை குறைந்தன.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எணகளும் (தேசிய பங்குச் சந்தையில் ஐ.டி. பிரிவு தவி ர) குறைந்தன..

இறுதியில் சென்செக்ஸ் 117.89 புள்ளிகளும், நிஃப்டி 47.60 புள்ளிகளும் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தையில் மட்டுமல்லாது, இன்று ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 117.89 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,373.01 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 68.96, சுமால் கேப் 96.11, ப ி. எஸ ். இ. 500- 65.32 புள்ளிகள் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 47.60 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 5,144.65 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 178.70, சி.என்.எக்ஸ். மிட் கேப் 99.95, சி.என்.எக்ஸ். மிட் கேப் 50- 39, பாங்க் நிஃப்டி 36.95, சி.என்.எக்ஸ்.100- 53.30, சி.என்.எக்ஸ் .டிப்டி 74.95, சி.என்.எக்ஸ். 500- 50.35 புள்ளிகள் குறைந்தன. சி.என்.எக்ஸ். ஐ.டி மட்டும் 47.80 புள்ளி அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 965 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,722 பங்குகளின் விலை குறைந்தது, 68 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் வங்கி பிரிவு 0.46%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 0.47%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 1.80%, மின் உற்பத்தி பிரிவு 2.15%, வாகன உற்பத்தி பிரிவு 0.83%, ரியல் எஸ்டேட் 4.63%, பொதுத்துறை நிறுவனங்கள் 1.33% குறைந்தது.

ஆனால் உலோக உற்பத்தி பிரிவு 0.18%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 1.53%, அதிகரித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments