Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் சரிவு!

Webdunia
செவ்வாய், 6 மே 2008 (11:19 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் சரிந்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கும் போது மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 71.27 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 17,419.63 ஆக குறைந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 10 புள்ளி சரிந்து குறியீட்டு எண் 5,182.95 ஆக குறைந்தது.

ஆசிய பங்குச் சந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண் அதிகரித்தும், சிலவற்றில் குறைந்தும் இருந்தது.

மும்பை சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 63.43 புள்ளி குறைந்து, குறியீட்டு எண் 17,427.47 ஆக இருந்தது.

தேசி ய பங்குச ் சந்தையின ் நிஃப்டி 12.65 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 5,179.60 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 14.42, சுமால் கேப் 6.26 புள்ளிகள் அதிகரித்து இருந்தது. ப ி. எஸ ்.இ. 500- 12.24 புள்ளி குறைந்து இருந்தது.

ஆனால் அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே, மிட் கேப், சுமால் கேப் பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் 986 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 903 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 55 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,763.17 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,999.98 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.236.81 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,201.17 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.744.01 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.457.16 மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 88.66, எஸ் அண்ட் பி 500 6.41, நாஸ்டாக் 12.87 புள்ளிகள் குறைந்தது.

இன்று காலை ஆசி ய நாட்ட ு பங்குச ் சந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தது. சிலவற்றில் குறைந்து இருந்து உயர்ந்தன.

தென ் கொரியாவின ் சியோல ் காம்போசிட ் 7.06, ஹாங்காங்கின ் ஹாங்செங ் 10.76 புள்ளி அதிகரித்தன. இன்று ஜப்பான் பங்குச் சந்தைக்கு விடுமுறை.

ஆனால் சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட ் டைம்ஸ ் 0.85, சீனாவின் சாங்காய் காம்போசிட் 108.50 புள்ளிகள் குறைந்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments