Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 362 புள்ளி உயர்வு!

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (17:37 IST)
மும்ப ை பங்குச் சந்த ை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது வர்த்தகம் சிறிது மந்த நிலையில் இருந்தது. ரிசர்வ் வங்கியின் பொருளாதார கொள்கை அறிவிப்பிற்கு பிறகு பங்குச் சந்தை சூடு பிடிக்க தொடங்கியது.

காலையில் இருந்த ஏற்ற இறக்க நிலை மாறி, நண்பகல் 12 மணியளவில் இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரிக்கத் துவங்கின.


இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென்கொரிய பங்குச் சந்தை தவிர, மற்ற நாட்டு பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த பிறகு தொடங்கும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 362.50 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,378.46 புள்ளிகளாக உயர்ந்தது. .

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 79.55, ப ி. எஸ ். இ. 500- 131.97, சுமால் கேப் 75.49 புள்ளிகள் அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 105.85 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5195.50 புள்ளிகளாக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 183.55, சி.என்.எக்ஸ். ஐ.டி.189.40, பாங்க் நிஃப்டி 147.40, சி.என்.எக்ஸ்.100- 101.85, சி.என்.எக்ஸ்.டிப்டி 75.65, சி.என்.எக்ஸ். 500- 76.35, சி.என்.எக்ஸ். மிட் கேப் 122.85, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50- 56.90 புள்ளி அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,588 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,121 பங்குகளின் விலை குறைந்தது, 61 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின ் வங்கி பிரிவு 1.68%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 1.28%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 5.24%, தொழில்நுட்ப பிரிவு 2.04%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 2.02%, மின் உற்பத்தி பிரிவு 0.96%, உலோக உற்பத்தி பிரிவு 3.64 %, வாகன உற்பத்தி பிரிவு 1.52% பொதுத்துறை நிறுவனங்கள் 1.65%, ரியல் எஸ்டேட் 5.90% அதிகரித்தன.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,509.42 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,547.75 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இதேபோல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ.918.44 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை 1,085.05 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments