Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (11:02 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 61 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 17,076.44 ஆக உயர்ந்து இருந்தது.

இதே போல் நிஃப்டி 9 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5,5098.40 ஆக உயர்ந்து இருந்தது.

ஆனால் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து இரண்டு பங்குச் சந்தைகளிலும், எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் ஏற்ற இறக்கத்துடன் உள்ளன.

இன்று ரிசர்வ் வங்கி பொருளாதார கொள்கையை அறிவிக்க உள்ளது. இதை தொடர்ந்தே பங்குச் சந்தைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்க ரிசர்வ் வங்கியின் கூட்டமும் இரண்டு நாட்களில் நடக்க உள்ளது. இது ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் இரண்டு விழுக்காடு வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. மேலும் வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிடலாம் என்று தெரிகிறது. இவையும் இந்திய பங்குச் சந்தையில் எதிரொலிக்கும் வாய்ப்பு உள்ளது.

காலை 10.35 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 41.28 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 17,052.24 ஆக இருந்தது.

தேசி ய பங்குச ் சந்தையின ் நிஃப்டி 10.85 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5100.50 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 20.25 ப ி. எஸ ்.இ. 500- 16.93, சுமால் கேப் 40.41 புள்ளிகள் அதிகரித்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் சென்செக்ஸ், நிஃப்டி உட்பட எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்ப பிரிவு குறைந்து இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் 1082 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 984 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 48 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,509.42 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,547.75 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.38.33 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.918.44கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,085.05 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.166.61 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 20.11, எஸ்.பி 500- 1.47 புள்ளிகள் குறைந்து இருந்தன. அதே நேரத்தில் நாஸ்டாக் 1.47 புள்ளி அதிகரித்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று நடந்த வர்த்தகத்தில் குறியீட்டு எண்கள் உயர்ந்தன.

ஆசி ய நாட்ட ு பங்குச ் சந்தைகளில ், சில பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் உயர்ந்தும், சிலவற்றில் சரிந்தும் இருந்தன.

தென ் கொரியாவின ் சியோல ் காம்போசிட ் 16.96, சிங்கப்பூரின ் ஸ்டெய்ர்ட ் டைம்ஸ ் 23.53 புள்ளிகள் குறைந்து இருந்தன.

ஜப்பானின் நிக்கி 30.90, சீனாவின் சாங்காய் காம்போசிட் 98.96 ஹாங்காங்கின ் ஹாங்செங ் 284.37 புள்ளிகள் அதிகரித்தன.

நேற்று இந்திய பங்குச் சந்தைகளில் காலையில் இருந்தே ஏற்ற இறக்கமாக இருந்தது. மாலையில் சென்செக்ஸ், நிஃப்டி குறைந்தன.

இன்று காலையில் இருந்தே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. ரிசர்வ் வங்கி காலாண்டிற்கான பொருளாதார கொள்கையை அறிவிக்க உள்ளது. இதனை பொறுத்தே பங்குச் சந்தையின் நிலவரம் இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments