Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்

Webdunia
திங்கள், 28 ஏப்ரல் 2008 (11:22 IST)
மும்பை : மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 150 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 17,251 ஆக உயர்ந்து இருந்தது.

இதே போல் நிஃப்டி 10 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5,118 ஆக உயர்ந்து இருந்தது.

ஆனால் இந்த நிலை சிறிது நேரம் கூட தொடரவில்லை. இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் தொடர்ந்து குறைந்து வந்தன.

காலை 10.35 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 3.54 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 17,129.32 ஆக இருந்தது.

தேசி ய பங்குச ் சந்தையின ் நிஃப்டி 3.80 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5115.50 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 48.83, ப ி. எஸ ்.இ. 500- 19.09, சுமால் கேப் 47.07 புள்ளிகள் அதிகரித்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் சென்செக்ஸ், நிஃப்டி பிரிவு பங்குகளில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், மற்ற பிரிவு பங்குகளில் உயர்வே காணப்படுகிறது. தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்ப பிரிவு மட்டும் குறைந்து இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் 1347 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 806 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 63 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,384.83 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,071.74 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.313.09 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.898.11கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.973.58 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.75.47 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்த்கத்தில் குறியீட்டு எண்கள் உயர்ந்தன.

ஆசி ய நாட்ட ு பங்குச ் சந்தைகளில ், சில பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் உயர்ந்தும், சிலவற்றில் சரிந்தும் இருந்தன.

தென ் கொரியாவின ் சியோல ் காம்போசிட ் 6.59, ஜப்பானின ் நிக்க ி 56.07, சீனாவின் சாங்காய் காம்போசிட் 119.83 புள்ளிகள் குறைந்து இருந்தது.

அதே நேரத்தில் ஹாங்காங்கின ் ஹாங்செங ் 94.81, சிங்கப்பூரின ் ஸ்டெய்ர்ட ் டைம்ஸ ் 10.62 புள்ளிகள் அதிகரித்தன.

இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி அதிகரித்து வந்தது. இன்று முதலீட்டு நிறுவனங்கள் இலாப கணக்கை பார்க்கும் முயற்சியில் ஈடுபடலாம். அத்துடன் நாளை ரிசர்வ் வங்கி காலாண்டு கடன் கொள்கையை அறிவிக்க உள்ளது. இதனால் பங்கு விலைகளில் ஏற்ற இறக்கம் இருக்கும் என கருதப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து விவகாரம்: துணை முதல்வர் உதயநிதி விளக்கம்..!

இந்தி உள்பட தாய் மொழியில் மருத்துவ படிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு..!

Show comments