Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்வு!

Webdunia
வியாழன், 24 ஏப்ரல் 2008 (18:07 IST)
மும்ப ை பங்குச் சந்த ை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறியீட்டு எண்கள், மதியம் 2 மணியளவில் குறைய துவங்கின.

இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு இருந்தாலும், மற்ற ஆசிய பங்குச் சந்தைகள் பாதிக்கப்படவில்லை.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் 23.04 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,721.08 புள்ளிகளாக உயர்ந்தது.

அதே நேரத்தில் மிட் கேப் 262.01, சுமால் கேப் 58.85, ப ி. எஸ ். இ. 500- 15.09 புள்ளிகள் குறைந்தது.

மும்பையின் சென்செக்ஸ் அதிகரித்தாலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 22.95 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4,999.85 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 58.35, சி.என்.எக்ஸ்.100- 23.50, சி.என்.எக்ஸ்.டிப்டி. 36.05, சி.என்.எக்ஸ். 500- 21.65, சி.என்.எக்ஸ். மிட் கேப் 55.30, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50- 50.85 புள்ளி குறைந்தன.

பாங்க் நிஃப்டி 13.85, சி.என்.எக்ஸ். ஐ.டி.40.40 புள்ளி அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,266 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,465 பங்குகளின் விலை குறைந்தது, 54 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின ் வங்கி பிரிவு 0.35%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 0.36%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 1.67%, தொழில்நுட்ப பிரிவு 0.44%, அதிகரித்தன.

பொதுத்துறை நிறுவனங்கள் 1.53%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 0.07%, மின் உற்பத்தி பிரிவு 0.60%, உலோக உற்பத்தி பிரிவு 1.18 %, ரியல் எஸ்டேட் 0.24%, வாகன உற்பத்தி பிரிவு 0.19% குறைந்தன.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,736.20 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,217.13 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து 39,395.39 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை திரும்ப பெற்றுள்ளன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,094.35 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை 1,024.31 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து ரூ.26,205.99 கோடி பங்கு சந்தைகளில் முதலீடு செய்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments