Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 44 புள்ளிகள் உயர்வு!

Webdunia
செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (17:19 IST)
மும்ப ை பங்குச் சந்த ை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறைந்த குறியீட்டு எண்கள், நண்பகல் 1 மணியளவில் அதிகரிக்க துவங்கின.

இந்திய பங்குச் சந்தைகள் மட்டுமல்லாது, ஆசிய பங்குச் சந்தைகளிலும் காலையில் குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன. வர்த்தகம் நடக்கும் போது ஹாங்காங் சந்தையில் மட்டும் குறியீட்டு எண் அதிகரித்தன. சிங்கப்பூர் பங்கு சந்தையில் காலையில் குறைந்த குறியீட்டு எண்கள், பிறகு அதிகரித்து இறுதியில் நேற்றைய நிலைக்கு வந்தது.

ஆனால் அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் பாதகமான நிலை நிலவியது.

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய பிறகு தொடங்கும் ஐரோப்பிய பங்குச் சந்தையில் பிரிட்டன், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் பங்குச் சந்தைகளில் பாதகமான நிலை இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் 44.54 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,783.87 புள்ளிகளாக அதிகரித்தது.

ப ி. எஸ ். இ. 500- 38.81, சுமால் கேப் 45.25, மிட் கேப் 54.36 புள்ளி அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 12.30 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5,049.30 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 185.60, சி.என்.எக்ஸ்.100- 24.70, சி.என்.எக்ஸ்.டிப்டி 6.05, சி.என்.எக்ஸ். 500- 21.10, சி.என்.எக்ஸ். மிட் கேப் 27.25, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50- 20.80, பாங்க் நிஃப்டி 95.45 புள்ளிகள் அதிகரித்தன.

ஆனால் சி.என்.எக்ஸ். ஐ.டி. 223.95 புள்ளி குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,569 பங்குகளின் விலை அதிகரித்தது, 1128 பங்குகளின் விலை குறைந்தது, 61 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் வங்கி பிரிவு 1.59%, உலோக உற்பத்தி பிரிவு 2.07%, ரியல் எஸ்டேட் 3.008%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 1.90%, மின் உற்பத்தி பிரிவு 1.12%, பொதுத்துறை நிறுவனங்கள் 0.87% அதிகரித்தன.

தொழில்நுட்ப பிரிவு 2.40%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 0.34%, வாகன உற்பத்தி பிரிவு 0.04%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 1.03% குறைந்தது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,855.94 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,686.28 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து 39,207.42 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை திரும்ப பெற்றுள்ளன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.947.70 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை 836.12 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து ரூ.26,255.48 கோடி பங்கு சந்தைகளில் முதலீடு செய்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments