Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 237 புள்ளிகள் உயர்வு!

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2008 (18:18 IST)
மும்ப ை பங்குச் சந்த ை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறியீட்டு எண்கள் இறுதி வரை தொடர்ந்து அதிகரித்தன. பங்குகளின் விலையில் மாற்றம் இருந்தாலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் உயர்ந்தன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தது. ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சீனா தவிர மற்ற எல்லா நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் உயர்ந்து இருந்தன.

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய பிறகு தொடங்கும் ஐரோப்பிய பங்குச் சந்தையில் பிரிட்டன், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் பங்குச் சநதைகளில் பாதகமான நிலை இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் 237.01 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,481.20 ஆக அதிகரித்தது.

ப ி. எஸ ். இ. 500- 112.46, சுமால் கேப் 180.22, மிட் கேப் 137.29 புள்ளி அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 71.10 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4,958.40 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 232.15, சி.என்.எக்ஸ்.100- 66.90, சி.என்.எக்ஸ்.டிப்டி 65.45, சி.என்.எக்ஸ். 500- 68.15, சி.என்.எக்ஸ். மிட் கேப் 131.75, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50- 72.35, சி.என்.எக்ஸ். ஐ.டி.44.10, பாங்க் நிஃப்டி 213.15 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 2,025 பங்குகளின் விலை அதிகரித்தது. 703 பங்குகளின் விலை குறைந்தது, 51 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் தகவல் தொழில் நுட்ப பிரிவு 3.73%, வங்கி பிரிவு 3.13%, தொழில்நுட்ப பிரிவு 2.82%, உலோக உற்பத்தி பிரிவு 3.73%, வாகன உற்பத்தி பிரிவு 0.98%, ரியல் எஸ்டேட் 3.99%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 0.30%, மின் உற்பத்தி பிரிவு 1.14%, பொதுத்துறை நிறுவனங்கள் 1.70% அதிகரித்தன. பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 0.10% குறைந்தன.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,936.94 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,986.83 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.917.28 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை 1,007.36 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலுக்கு உதவி செய்ய அமெரிக்க ராணுவத்திற்கு ஜோ பைடன் உத்தரவு.. உலக போராக மாறுமா?

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் : இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு..!

இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்.. போர் ஆரம்பித்துவிட்டதா?

சென்னை அண்ணா பல்கலை உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்..!

18 வயதிற்குள் 50 முறை வன்கொடுமை! ஆசிரமத்தில் நடந்த அக்கிரமம்! - இந்தியா வந்து இங்கிலாந்து பெண்ணுக்கு நடந்த சோகம்!

Show comments