Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை : சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்வு!

Webdunia
புதன், 16 ஏப்ரல் 2008 (17:48 IST)
மும்ப ை பங்குச் சந்த ை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன. முதலீட்டாளர்கள் இலாப கணக்கு பார்ப்பதற்காக பங்குகளை விற்பனை செய்து, வேறு பங்குகளை வாங்கும் போக்கு காணப்பட்டது. இதனால் எல்லா பங்குகளின் விலைகளிலும் மாற்றம் இருந்தது. இறுதியில் நேற்றைய இறுதி நிலவரத்தைவிட குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

அமெரிக்க பங்குச் சந்தையிலும், ஆசிய பங்குச் சந்தையிலும் சாதகமான போக்கு நிலவியது. ஹாங்காங் பங்குச் சந்தையில் காலையில் அதிகரித்த குறியீட்டு எண்கள் இறுதியில் குறைந்தன. சீன பங்குச் சந்தையில் காலையிலேயே குறைந்தன.

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய பிறகு தொடங்கும் ஐரோப்பிய பங்குச் சந்தையிலும் இன்று குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இறுதியில் 90.53 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,244.19 ஆக அதிகரித்தது.

ப ி. எஸ ். இ. 500- 45.33, சுமால் கேப் 146.75, மிட் கேப் 94.69 புள்ளி அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 7.65 புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 4,887.30 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 92.55, சி.என்.எக்ஸ்.100- 13.55, சி.என்.எக்ஸ்.டிப்டி 6.35, சி.என்.எக்ஸ். 500-21.75, சி.என்.எக்ஸ். மிட் கேப் 75.30, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50-24.75, சி.என்.எக்ஸ். ஐ.டி. 23.10, பாங்க் நிஃப்டி 53.15 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,864 பங்குகளின் விலை அதிகரித்தது, 816 பங்குகளின் விலை குறைந்தது, 74 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் தகவல் தொழில் நுட்ப பிரிவு 3.73%, வங்கி பிரிவு 0.52%, தொழில்நுட்ப பிரிவு 1.99%, உலோக உற்பத்தி பிரிவு 0.83%, வாகன உற்பத்தி பிரிவு 0.03%, ரியல் எஸ்டேட் 0.10%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 0.78% அதிகரித்தன.

நுகர்வோர் பொருட்கள் பிரிவு 0.52%, மின் உற்பத்தி பிரிவு 0.49%, பொதுத்துறை நிறுவனங்கள் 0.08% குறைந்தன.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,525.96 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,582.48 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.738.61 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை 725.34 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments