Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு!

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2008 (18:33 IST)
தற்போது நிலையாக உள்ள தங்கத்தின் விலை விரைவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்காவைச் சேர்ந்த தங்க வர்த்தக நிபுணர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் பல ஆண்டுகளாக தங்க வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனம் வான் ஏக் கோல்ட் ஃபண்ட். இது உலக அளவில் தங்க வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பிரபல நிறுவனமாகும்.

இதன் முதலீட்டு மேலாளர் ஜோய் போஸ்டர், இன்று கொல்கத்தாவில் ஏ.ஐ.ஜி. வேர்ட்ல் கோல்ட் ஃபண்ட் என்ற பரஸ்பர நிதி திட்டத்தை துவக்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தி நிறுவனத்திடம் கூறியாதவது, “தற்போது தங்கத்தின் விலை அடுத்த ஆறு மாதம் வரை 1 அவுன்ஸ் 850 முதல் 950 டாலர் என்ற அளவில் இருக்கும். பிறகு தங்கத்தின் விலை அதிகரிக்கும். இந்த வருட முடிவில் 1 அவுன்ஸ் 1030 டாலர் வரை உயர வாய்ப்புள்ளது. அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலையை வர்த்தகர்கள் அதிகரித்து கொண்டே இருப்பார்கள ் ” என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

Show comments