Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தை: சென்செக்ஸ் 169 புள்ளிக‌ள் சரிவு!

பங்குச் சந்தை: சென்செக்ஸ் 169 புள்ளிக‌ள் சரிவு!
, செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (16:53 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறைய தொடங்கிய குறியீட்டு எண்கள் இறுதி வரை எந்த மாற்றமும் இல்லாமல் குறைந்தன.

இந்தியாவில் மட்டுமல்லாது, அமெரிக்கா, ஆசிய, ஐரோப்பிய நாடு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்களும் குறைந்தன. நேற்று எல்லா பங்குச் சந்தைகளிலும் அதிகரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலையில் பங்குச் சந்தைகளில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைய துவங்கின. சுமார் 11.30 மணி அளவில் சுமால் கேப்,மிட் கேப், வங்கி பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இறுதியில் 169.46 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 15,587.62 ஆக குறைந்தது. இதே போல் பி.எஸ்.இ. 500- 33.92 புள்ளி குறைந்தது. ஆனால் சுமால் கேப் 62.95, மிட் கேப் 81.87 புள்ளி அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 51.55 புள்ளி குறைந்து, குறியீட்டு எண் 4709.65 ஆக குறைந்தது.


தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 5.50, சி.என்.எக்ஸ். ஐ.டி62.80, சி.என்.எக்ஸ்.100-43.05,சி.என்.எக்ஸ்.டிப்டி 49.80, சி.என்.எக்ஸ். 500-23.40 புள்ளி குறைந்தது.

அதே நேரத்தில் பாங்க் நிஃப்டி 30.30,சி.என்.எக்ஸ்.மிட் கேப் 50.95,சி.என்.எக்ஸ். மிட் கேப்50-10.50 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,393 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,210 பங்குகளின் விலை குறைந்தது, 69 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் ரியல் எஸ்டேட் 0.98%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 1.69%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 0.83%, தொழில்நுட்ப பிரிவு 1.06%, உலோக உற்பத்தி பிரிவு 1.93 %, வாகன உற்பத்தி பிரிவு 0.42%, வங்கி பிரிவு 0.62%, மின் உற்பத்தி பிரிவு 0.04%, பொதுத்துறை நிறுவனங்கள் 0.40%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 1.78% குறைந்தன.

Share this Story:

Follow Webdunia tamil