மும்பை: தங்கம் விலை 2 நாளில் ரூ.475 சரிவு!

Webdunia
புதன், 2 ஏப்ரல் 2008 (15:25 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் தங்கத்தின ் விலை 10 கிராமிற்கு நேற்று ரூ.275 குறைந்த நிலையில், இன்று மேலும் ரூ.200 சரிந்துள்ளது. இதன்படி, இரண்டு நாளில் தங்கத்தின் விலை ரூ.475 குறைந்துள்ளது.

வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,020 குறைந்திருந்த நிலையில், இன்று ரூ.30 அதிகரித்துள்ளது.

நகை உற்பத்தியாளர்கள் தங்கம் வாங்குவது குறைவாக இருந்ததால், இதன் விலைகள் குறைந்தன. அதே நேரத்தில் தொழில் துறையினர் வெள்ளி வாங்க ஆர்வம் காண்பித்ததால் விலை சிறிது அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நியூயார்க் சந்தையில் அவுன்ஸ் 884.20/885.40 டாலராக இருந்த தங்கத்தின் விலை இன்று 887.10/887.90 டாலராகவும், அவுன்ஸ் 16.81/16.86 டாலராக இருந்த வெள்ளியின் விலை 16.88/16.89 டாலராகவும் உயர்ந்துள்ளது.

மும்பை சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,545
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,485
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.22,670
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பி அடிக்க காங்கிரஸிற்கு பவர் இருக்கிறதா? என எப்படி கேட்கலாம்: சசிகாந்த் எம்பி ஆவேசம்..!

இயந்திரம் மூலம் டிக்கெட் கொடுப்பது திடீர் நிறுத்தம்.. சென்னை மாநகர போக்குவரத்து முடிவுக்கு என்ன காரணம்?

காங்கிரஸ் உள்பட எந்த கட்சியும் வேண்டாம்.. கூட்டணி கதவை அடைத்துவிட்டாரா விஜய்?

17 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து.. நிலைகுலைய செய்த கார் பந்தயம்..!

ஏலியன்கள் இருப்பது உண்மை!.. அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா பேட்டி!..

Show comments