தங்கம் விலை மீண்டும் சரிந்தது!

Webdunia
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (19:54 IST)
உள்நாட்டுச் சந்தையில ், ஆறு வாரங்களாக இல்லாத அளவிற்கு 24 காரட் தங்கத்தின் விலை (10 கிராம்) ரூ.11,830 ஆக குறைந்துள்ளது.

பிப்ரவரி 19 ஆம் தேதி 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.11,830 ஆக இருந்தது. அப்போத ு, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 900 டாலருக்கும் குறைவாக இருந்தது.

லண்டன் சந்தையில் அவுன்ஸ் 20.18 டாலர் (2.2 விழுக்காடு) குறைந்து 867.70 டாலருக்கு விற்கப்படுகிறது. பிப்ரவரி 15ம் தேதிக்கு பிறகு தற்போதுதான் இந்த விலைக்கு தங்கத்தின் மதிப்பு திரும்பியுள்ளது. வெள்ளியின் விலையும் அவுன்ஸ் 16.795 டாலராக குறைந்துள்ளது.

இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை குறைந்தது. இன்று தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.460 குறைந்து முந்தைய மதிப்பை எட்டியுள்ளது.

உள்நாட்டுச் சந்தையில ், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.125 குறைந்து ரூ.9,800 ஆகவும ், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,270 குறைந்து ர ூ.22,230 ஆகவும் உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டி தொல்லை கொடுத்த காதலர்.. காதலி செய்த திகில் சம்பவம்..!

மத்திய கிழக்கில் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1500 புள்ளிகள் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

தவெகவிடம் காங்கிரஸ் பேசுகிறதா?!.. கோபமாக வெடித்த செல்வப்பெருந்தகை!...

இந்த பக்கம் ஏன் வறீங்க?. நீங்க என்ன விஐபி-யா?!.. அசிங்கப்பட்ட வானதி சீனிவாசன் (வீடியோ)..

ஈரான் - அமெரிக்கா போர் எதிரொலி!.. மாநிலங்களுக்கு ஒன்றிய உள்துறை அலார்ட்!...

Show comments