Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை 403.17 புள்ளிகள் உயர்வு!

Webdunia
வெள்ளி, 14 மார்ச் 2008 (19:33 IST)
மும்ப ை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறியீட்டு எண்கள், ஏற்ற இறக்கத்துடன் இறுதியில் நேற்றைய மாலை நிலவரத்தை வ ிட அதிகரித்தது.

ஆனால் சென்செக்ஸ் 16 ஆயிரத்திற்கும் குறைவாகவும், நிஃப்டி 5,000 க்கும் குறைவாகவே உள்ளது.

இத் போல் மற்ற பிரிவு குறியீட்டு எண்களும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கவில்லை.

இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது, மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் ஏற்ற இறக்கமாக இருந்தன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன.

ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் நேற்று குறைந்திருந்த குறியீட்டு எண்கள் இன்று உயர்ந்தன. இதனால் இந்திய பங்குச் சந்தை பாதிக்கப்படவில்லை.

பணவீக்க விகிதம் 5.11 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்ற தகவல் சிறிது பங்குச் சந்தையை பாதித்தது. ஏற்கனவே இந்த ஆண்டு ஜனவரியில் தொழில் துறை உற்பத்தி, சென்ற வருடத்தைவிட பாதி அளவு குறைந்தது என மத்திய அரசு நேற்று அறிவித்தள்ளது இதன் பாதிப்பும் இனி பங்குச் சந்தையில் இருக்கும்.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 403.17 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 15,760.52 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 122.20 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4745.80 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 4.32, மிட் கேப் 55.78,,ப ி. எஸ ். இ. 500-139.79 புள்ளிகள் அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 208.35,சி.என்.எக்ஸ் ஐ.டி 91.20, பாங்க் நிஃப்டி 191.35, சி.என்.எக்ஸ் 100-117.35, சி.என்.எக்ஸ் டிப்டி 109.25, சி.என்.எக்ஸ் 500-83.55, சி.என்.எக்ஸ் மிட் கேப் 78.80,சி.என்.எக்ஸ் மிட் கேப் 50-39.75 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1214 பங்குகளின் விலை அதிகரித்தது. 1458 பங்குகளின் விலை குறைந்தது. 60 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் உலோக உற்பத்தி நிறுவனங்களின் பிரிவு குறியீட்டு எண் 3.28%, தொழில் நுட்ப பிரிவு 1.48%, பொதுத்துறை நிறுவனங்கள் 1.83%, மின் உற்பத்தி பிரிவு 2.79%, வாகன உற்பத்தி பிரிவு 0.08%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 2.37%, தகவல் தொழில்நுட்ப பிரிவு 2.86%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 3.32%, வங்கி பிரிவு 3.05%, ரியல்எஸ்டேட் 4.76% அதிகரித்தன.


இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 பங்குகளில் 25 பங்குகளின் விலை அதிகரித்தது. 5 பங்குகளின் விலை குறைந்தது.

விலை அதிகரித்த பங்குகள் :
1. ஏ.சி.ச ி. ரூ.800.45 (ரூ.21.20)
2. சிப்லா ரூ.205.35 (ரூ.04.45)
3. டி.எல்.எப். ரூ.654.25 (ரூ.47.50)
4. கிராசிம் ரூ.2858.15 (ரூ.66.00)
5. ஹெச்.டி.எப்.சி. ரூ.2502.50 (ர ூ01.60 )
6. ஹெச்.டி.எப்.சி. வங்கி ரூ.1316.00 (ரூ.19.85)
7. ஹின்டால்க ோ ரூ.181.55 (ரூ.07.85)
8. ஹிந்துஸ் யூனிலிவர் ரூ.226.15 (ரூ.03.70)
9. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ரூ.878.20 (ரூ.40.30)
10. இன்போசியஸ் ரூ.1369.35 (ரூ.35.85)
11. ஐ.டி.சி. ரூ.191.95 (ரூ.06.50)
12 ஜெய்பிரா ரூ.236.26 (ரூ.17.15)
13. எல்.அண்ட்.டி ரூ.2908.00 (ரூ.103.10)
14. என்.டி.பி.சி. ரூ.194.90 (ரூ.08.20)
15. ஓ.என்.ஜி.சி. ரூ.1003.20 (ரூ.16.85)
16. ரான்பாக்ஸி ரூ.464.10 (ரூ.06.80)
17. ரிலையன்ஸ் கம்யூன ி ரூ.518.35 (ரூ.16.90)
18. ரிலையன்ஸ் எனர்ஜி ரூ.1296.15 (ரூ.98.90)
19. ரிலையன்ஸ் இன்டஸ ் ரூ.2321.70 (ரூ.80.05)
20. சத்யம் ரூ.378.85 (ரூ.14.80)
21. எஸ்.பி.ஐ. ரூ.1714.35 (ரூ.18.65)
22. டாடா ஸ்டீல் ரூ.715.25 (ரூ.18.05)
23. டாடா மோட்டார்ஸ் ரூ.635.95 (ரூ.15.60)
24. டி.சி.எஸ். ரூ.803.55 ( ரூ.25.00)
25. விப்ரோ ரூ.369.35 (ரூ.04.35)

விலை குறைந்த பங்கு :
1. அம்புஜா சிமெண்ட் ரூ.120.00 (ரூ.00.85)
2. பார்தி ஏர்டெல் ரூ.752.95 (ரூ.25.45)
3. பி.ஹெச்.இ.எல். ரூ.1878.95 (ரூ.103.85)
4. மாருதி ரூ.835.20 (ரூ.04.55)
5. மகேந்திரா அண்ட்
மகேந்திரா ரூ.649.45 ( ரூ.11.55)

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments