Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

Webdunia
வெள்ளி, 14 மார்ச் 2008 (11:38 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

காலை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது (9.45 மணியளவில்) சென்செக்ஸ் 120 புள்ளியும், நிஃப்டி 35.45 புள்ளியும் அதிகரித்து இருந்தன.

சென்செக்ஸ், நிஃப்டி பிரிவில் உள்ள ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், எல் அண்ட் டி,ஓ.என்.ஜி.சி ஆகிய பங்குக‌‌‌ளின் விலை அதிகரித்தது. இதுவே குறியீட்டு எண்கள் அதிகரித்ததற்கு காரணம்.

அத்துடன் நேற்று பங்கு சந்தையில் பங்குகளின் விலை அதிக அளவு வீழ்ச்சி அடைந்தது. இந்த விலை குறைவாக உள்ள பங்குகளை முதலீட்டு நிறுவனங்களும், இதர பிரிவு முதலீட்டாளர்களும் வாங்குவதில் ஆர்வம் கா‌‌ண்பித்தனர். இதனால் பங்குகளின் விலை அதிகரித்து, குறியீட்டு எண் உயர்ந்தன.

காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 195.34 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 15,553.34 ஆக அதிகரித்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 39.95 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4663.55 ஆக உயர்ந்தது.

அதே நேரத்தில் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 12.36, சுமால் கேப் 8.03, குறைந்து இருந்தது. ஆனால் பி.எஸ்.இ.500-52.51 புள்ளிகள் அதிகரித்து.

தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 35.50, நாஸ்டாக் 19.74 எஸ் அண்ட் பி 6.71 புள்ளிகள் அதிகரித்து இருந்தன.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 36.10, ஹாங்காங்கின் ஹாங்செங் 150.13, ஜப்பானின் நிக்கி 119.15, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 4.63, சீனாவின் சாங்காய் காம்போசிட் 149.15 புள்ளிகள் குறைந்து இருந்தது.

அமெரிக்க பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்த போதிலும், ஆசிய பங்கு சந்தைகளிலும் பாதகமான போக்கு இருப்பதால் இந்திய பங்குச் சந்தையின் இன்றைய போக்கை உறுதியாக கூறமுடியாது.

காலையில் அதிகரித்த பங்கு விலைகளும், குறியீட்டு எண்களும் அடிக்கடி மாறுவதற்கு வாய்ப்பு உண்டு.

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய பிறகு, ஐரோப்பிய பங்குச் சந்தை துவங்கும். இதன் நிலைமையை பொறுத்தே இந்திய பங்குச் சந்தையின் நிலவரம் மாறுவதற்கு வாய்ப்பு உண்டு.

இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் காலை 11.45 மணி முதல் நண்பகல் 12.30 வரை வர்த்தகம் நிறுத்தப்படும். மீண்டும் 12.30 மணியளவில் வர்த்தகம் தொடங்கி மாலை 4.15 வரை நடைபெறும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments