Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் கடும் சரிவு!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2008 (11:18 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 16 ஆயிரத்தை விட குறைந்து 15,986.52 ஆக குறைந்தது. இது புதன் கிழமை இறுதி நிலவரத்தை விட 555.56 புள்ளிகள் குறைவு.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 157.90 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 4,763.50 புள்ளிகளாக குறைந்தது.

இதற்கு காரணம் சென்செக்ஸ், நிஃப்டி பிரிவில் உள்ள வங்கி, ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்கு விலை அதிக அளவு குறைந்ததே. தேசிய பங்குச் சந்தையில் இன்போசியஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் பங்குகளும் அதிக அளவு குறைந்தன.

காலையில் இருந்து அதிக சரிவுடன் துவங்கிய பங்குச் சந்தை, தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கு காரணம் ஆசிய நாடுகள் உட்பட மற்ற நாடுகளிலும் பங்கு விலை குறைகின்றது. இதன் பிரதிபலிப்பே, இந்திய பங்குச் சந்தையின் சரிவுக்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இந்திய பங்குச் சந்தையின் வர்த்தகம் துவங்கிய பிறகு, ஐரோப்பிய நாடுகளில் பங்குச் சந்தைகள் ஆரம்பிக்கும். இந்த நாடுகளில் நிலவும் நிலைமையை பொறுத்தே, பிற்பகலில் இங்கும் பங்குச் சந்தைகளின் நிலவரத்தை கணிக்க முடியும் என்று கருதுகின்றனர்.

காலை 10.45 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 504.13 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 16,037.95 ஆக குறைந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 142.65 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4,778.75 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 297.35, சுமால் கேப் 356.1, பி.எஸ்.இ. 500-233.71புள்ளிகள் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் 3 முதல் 4 விழுக்காடு வரை குறைந்தன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 214.60, நாஸ்டாக் 52.13 எஸ்.அண்ட் பி. 500-29.36 புள்ளிகள் குறைந்து இருந்தது.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 36.02 புள்ளிகள் குறைந்து இருந்தது.
ஆனால் ஹாங்காங்கின் ஹாங்செங், ஜப்பானின் நிக்கியில் மாற்றமில்லை. சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 7.15,சீனாவின் சாங்காய் காம்போசிட் 152.15 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.

இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் காலை 11.45 மணி முதல் நண்பகல் 12.30 வரை வர்த்தகம் நிறுத்தப்படும். மீண்டும் 12.30 மணியளவில் வர்த்தகம் தொடங்கி மாலை 4.15 வரை நடைபெறும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments