பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

Webdunia
புதன், 5 மார்ச் 2008 (12:44 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறைந்திருந்த குறியீட்டு எண்கள ், அடுத்த பத்து நிமிடத்தில் உயர துவங்கி ன.

நேற்று பங்குகளின் விலை அதிக அளவு குறைந்தத ு. இதனால் சிறு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காண்பித்தனர ்.

இதனால் சென்செக்ஸ் 30.85 புள்ளிகளும ், நிஃப்டி 23.75 புள்ளிகளும் அதிகரித்த ன.

ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ ், இன்போசியஸ ், டாடா ஸ்டீல் ஆகிய பங்குகளை வாங்குவதில் சிறு முதலீட்டாளர்கள் ஆர்வம் காண்பித்தனர ்.

காலையில் இருந்து அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்த பங்கு விலைகள ், 11 மணியளவில் குறைய துவங்கியத ு.

காலை 11.45 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 44.44 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 16,295.45 ஆக குறைந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 9.95 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4,854.30 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 103.58, சுமால் கேப் 167.38, பி.எஸ்.இ. 500-55.40 புள்ளிகள் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்ப பிரிவு தவிர, மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.

காலை நடந்த வர்த்தகத்தில் சுமால் கேப், மிட் கேப் பிரிவு பங்குகளின் விலை குறைந்து வருகிறது. வங்கி, ரியல் எஸ்டேட் பங்குகள் அதிக அளவு பாதிக்கப்பட்டன. பங்குச் சந்தையில் தொடர்ந்து பங்கு விலை குறைகின்றது.

முதலீட்டாளர்களின் கவனம் தங்கம், பிளாட்டினம். தாமிரம் போன்ற உலோக சந்தைகளிலும், மற்ற சந்தைகளிலும் திரும்பியுள்ளது.

இதனால் சென்செக்ஸ் 16 ஆயிரம் என்ற அளவிற்கு குறைய வாய்ப்பு இருப்பதாக மார்க்கெட் வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது.

இன்று இடைவேளைக்கு பிறகும், பங்குகளின் விலை அதிக அளவு ஏற்ற இறக்கம் இருக்கும். ஆனால் உயர்வதற்கு வாய்ப்பு மிக குறைந்த அளவே உள்ளது என வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 45.10 புள்ளிகள் குறைந்து இருந்தது. ஆனால் நாஸ்டாக் 1.68 புள்ளிகள் அதகரித்து இருந்தது. எஸ். அண்ட் பி. 500-நேற்று 0.70 புள்ளி அதிகரித்தது

இதே போல் ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் ஹாங்காங்கின் ஹாங்செங் 134.54, ஜப்பானின் நிக்கி 20.22, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 10.54 சீனாவின் சாங்காய் காம்போசிட் 203.12 புள்ளிகள் குறைந்து இருந்தன. ஆனால் தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 0.92 புள்ளிகள் அதிகரித்து இருந்தத ு.

இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் காலை 11.45 மணி முதல் நண்பகல் 12.30 வரை வர்த்தகம் நிறுத்தப்படும். மீண்டும் 12.30 மணியளவில் வர்த்தகம் தொடங்கி மாலை 4.15 வரை நடைபெறும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக்கில் டைம் பாம்!.. குண்டு வெடித்து 2 பே மரணம்!.. பாகிஸ்தானில் சோகம்!..

இஸ்ரேல் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு!. மூவருக்கு தூக்கு தண்டனை...

திரிஷா விஷயத்தில் மௌனம் ஏன்?.. பாஜகவை பார்த்து பயமா?... வன்னியரசு கேள்வி!..

வாய் தவறி திரிஷாவை பற்றி பேசிட்டேன்!.. மன்னிப்பு கேட்ட நயினார் நாகேந்திரன்!...

தாயின் மகப்பேறு கால போட்டோஷூட்.. 3 வயது சிறுவன் எதிர்பாரா விபத்தில் பலி..!

Show comments