Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை 900 புள்ளி சரிவு!

Webdunia
திங்கள், 3 மார்ச் 2008 (19:40 IST)
மும்ப ை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறைந்த குறியீட்டு எண்கள் தொடர்ந்து சரிந்த ன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 17 ஆயிரத்திற்கும ், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 5 ஆயிரத்திற்கும் குறைவாக சரிந்தத ு.

மத்திய அரசின் 2008-09 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், பங்குச் சந்தையில் இரண்டாம் நாளாக பாதகமான நிலையையே ஏற்படுத்தியது. அத்துடன் அந்நிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் சரிந்தன.

முதலீட்டு நிறுவனங்களின் கவனம் தங்கம், பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஆகியவற்றின் மீது திரும்பியது. இவற்றின் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்தது.

இன்று மாலை வர்த்தகம் முடிவடையும் போது, சென்செக்ஸ் வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தைவிட 900.84 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 16,677.88 ஆக குறைந்தது. பட்ஜெட்டிற்கு பிறகு இரண்டே நாட்களில் சென்செக்ஸ் 5 விழுக்காடுகளுக்கும் அதிகமாக குறைந்துள்ளது.

காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சென்செக்ஸ் 350 புள்ளிகள் குறைந்து இருந்தது. ஒரு நிலையில் 944.09 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 16,634.63 புள்ளிகளாக குறைந்தது.

சிறு முதலீட்டாளர்கள் உட்பட எல்லா தரப்பினரும் லாப கணக்கு பார்த்த காரணத்தினால் பங்குகளின் விலை அதிக அளவு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 270.50 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 4,953.00 ஆக குறைந்தது.


இன்று வங்கி,மின் உற்பத்தி,ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்கு விலை அதிக அளவு குறைந்தது. வங்கிகள் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பால், ஸ்டேட் வங்கி, பஞ்சாப் வங்கி உட்பட வங்கிகளின் பங்குவிலைகள் அதிக அளவு குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 389.78, மிட் கேப் 315.54, ப ி. எஸ ். இ 500-356.14 புள்ளிகள் குறைந்தன.

இன்று மும்பை பங்குச் சந்தையில் ரூ5,090 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனையாயின. வெள்ளிக் கிழமை ரூ.6,721.65 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனை ஆகி இருந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜீனியர் 571.75, சி.என்.எக்ஸ் ஐ.டி 159.40, பாங்க் நிஃப்டி 640.90,சி.என்.எக்ஸ் 100-268.40 ,சி.என்.எக்ஸ் டிப்டி 271.25,சி.என்.எக்ஸ் 500-221.75, சி.என்.எக்ஸ் மிட் கேப் 270.75 சி.என்.எக்ஸ் மிட் கேப் 50 -111.80 புள்ளிகள் குறைந்தன.

வ‌ர்‌த்தக நேர‌ம் மா‌ற்ற‌ம்!

செயற்கைகோள ் தொடர்பு தடைபடுவதால் நாளை முதல் 18 ந் தேதி வரை பங்குச் சந்தையின் வர்த்தக நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி காலை 9.55 மணி முதல் 11.45 வரையிலும், அதன் பிறகு நண்பகல் 12.30 மணி முதல் மாலை 4.15 வரை வர்த்தகம் நடைபெறும். (நண்பகல் 11.45 முதல் 12.30 வரை வர்த்தகம் நடைபெறாத ு).

இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் 4 4 பங்குகளின் விலை அதிகரித்தது. 26 பங்குகளின் விலை குறைந்தது.

விலை அதிகரித்த பங்குகள் :

1) சிப்லா ரூ.211.65 (ரூ.04.40)
2) ஹிந்துஸ் யூனிலிவர் ரூ.231.80 (ரூ.04.45)
3) மாருதி ரூ.874.30 (ரூ.07.10)
4) ரான்பாக்ஸி ரூ.450.55 (ரூ.04.80)

விலை குறைந்த பங்கு :

1) ஏ.சி.ச ி. ரூ.786.15 (ரூ.06.55)
2) அம்புஜா சிமெண்ட் ரூ.118.80 (ரூ.02.15 )
3) பஜாஜ் ஆட்ட ோ ரூ.2255.50 (ரூ.24.65)
4) பார்தி ஏர்டெல் ரூ.790.55 (ரூ.35.05)
5) பி.ஹெச்.இ.எல். ரூ.2099.45 (ரூ.182.55)
6) டி.எல்.எப். ரூ.714.70 (ரூ.65.85)
7) கிராசிம் ரூ.2778.95 (ரூ.109.50)
8) ஹெச்.டி.எப்.சி. ரூ.2571.35 (ர ூ231.35)
9) ஹெச்.டி.எப்.சி. வங்கி ரூ.1390.55 (ரூ.62.90)
10) ஹின்டால்கோ ரூ.189.90 (ரூ.13.05)
11) ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ரூ.1024.45 (ரூ.66.50)
12) இன்போசியஸ் ரூ.1472.00 (ரூ.74.85)
13) ஐ.டி.சி. ரூ.193.00 (ரூ.09.15)
14) எல்.அண்ட்.டி ரூ.3343.85 (ரூ.179.20)
15) மகேந்திரா அண்ட்
மகேந்திரா ரூ.684.25 ( ரூ.08.55)
16) என்.டி.பி.சி. ரூ.188.95 (ரூ.12.80)
17) ஓ.என்.ஜி.சி. ரூ.979.20 (ரூ.33.15)
18) ரிலையன்ஸ் கம்யூனி. ரூ.541.40 (ரூ.33.35)
19) ரிலையன்ஸ் எனர்ஜி ரூ.1485.55 (ரூ.82.20)
20) ரிலையன்ஸ் இன்டஸ். ரூ.2304.75 (ரூ.153.50)
21) சத்யம் ரூ.411.35 (ரூ.22.20)
22) எஸ்.பி.ஐ. ரூ.1923.40 (ரூ.186.30)
23) டாடா மோட்டார்ஸ் ரூ.693.15 (ரூ.07.10)
24) டாடா ஸ்டீல் ரூ.770.65 (ரூ.30.90)
25) டி.சி.எஸ். ரூ.845.05 (ரூ.29.25)
26) விப்ரோ ரூ.419.70 (ரூ.14.95)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments