Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை சரிவு!

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2008 (13:27 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த எண்கள் ஐந்தாவது நிமிடத்திலேயே சரிய ஆரம்பித்தன.

நேற்று காலையில் பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கும் போது, குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தது. பிறகு மதியத்திற்கு மேல் குறைந்தது. ஆனால் இன்று காலையில் இருந்தே தொடர்ந்து சரிந்து வருகின்றன.

இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது, சென்செக்ஸ் 96 புள்ளிளும், நிஃப்டி 23.30 புள்ளிகளும் அதிகரித்து இருந்தது. ஆனால் பிறகு எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிய துவங்கின.

காலை 11.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 100.98 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,725.01 ஆக குறைந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 27.10 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5241.30 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 34.76,சுமால் கேப் 55.40 பி.எஸ்.இ 500- 39.93 புள்ளிகள் சரிந்தன.

தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.

இந்திய பங்குச் சந்தையில் மட்டுமல்லாது, மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சிலவற்றில் பங்குவிலைகள் குறைந்தன. சிலவற்றில் அதிகரித்தன.

ஹாங்காங்கின் ஹாங்செங் 224.10, சீனாவின் சாங்காய் காம்போசிட் 49.15 புள்ளிகள் சரிந்தன. அதே நேரத்தில் சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 24.06, ஜப்பானின் நிக்கி 105.79 புள்ளிகள் குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையின் டோவ் போன்ஸ் 9.36, நாஸ்டாக் 6.79 புள்ளிகள் அதிகரித்தன. எஸ் அண்ட் பி 500 எவ்வித மாற்றமும் இல்லை. ஐரோப்பிய நாடுகள் பங்குச் சந்தையில் ஜெர்மனி, இத்தாலி தவிர மற்ற நாட்டு பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன. குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ் பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன.

நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சமர்பித்த பொருளாதார ஆய்வறிக்கையில் சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துடன் விவசாய துறை வளர்ச்சி பாதிப்பு, சவால் விடு்ம் பணவீக்கம், தொழில் துறை வளர்ச்சி குறைவு என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முடிவுகள் பங்குச் சந்தையை பாதிப்பதுடன், நாளை தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டின் எதிர்பார்‌ப்‌புகளும் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இன்று பங்குச் சந்தையின் போக்கை நிர்ணயிக்க முடியாமல் உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments