Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும் பங்குச் சந்தைகளில் சரிவு!

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (19:40 IST)
பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் இன்றும் தொடர்ந்து சரிந்தன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று 62.04 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,464.89 ஆக குறைந்தது.

இதேபோல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 12.90 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5,120.35 ஆக குறைந்தது.

இன்று நடந்த வர்த்தகத்தில் ஒரு நிலையில் சென்செக்ஸ் 323.87 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,203.06 ஆக குறைந்தது. இதே மாதிரி 161.80 புள்ளிகள் உயர்ந்து 17,688.73 ஆக அதிகரித்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டியும் ஒரு நிலையில் 5,171.70 ஆக அதிகரித்தது. இதற்கு நேர்மாறாக 5,038.35 என்ற அளவிற்கு குறைந்தது.

இன்று காலை முதல் மாலை வரை பங்குகளின் விலைகள் அதிகரிப்பதும் குறைவதுமாக ஒரு நிலையில்லாமல் இருந்தது.

ஐரோப்பிய சந்தைகளில் இருந்து வந்த சாதகமான தகவல்களை தொடர்ந்து மதியம் 3 மணிக்கு மேல் சில பங்குகளின் விலை அதிகரித்தது.

பங்குச் சந்தையில் தொடர்ந்து வரும் சரிவால் வொக்கார்ட் மருத்துவமனை பங்குகளை வெளியிடுவதை நிறுத்தி வைத்துள்ளதாக நேற்று அறிவித்தது. இதன் பங்கு வெளியிட்டிற்கு விண்ணப்பிக்க கடைசி நாளான நேற்று 20 விழுக்காடு பங்குகளுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் வந்து இருந்தன.

இன்று எம்மார் எம்.ஜி.எஃப். நிறுவனமும் புதிதாக வெளியிடும் பங்குகளை ரத்து செய்திருப்பதாக அறிவித்தது.
சிறு முதலீட்டாளர்கள் முதல் முதலீட்டு நிறுவனங்கள் என எல்லா தரப்பினரும், இவற்றின் பங்குகளுக்கு விண்ணப்பிக்க தயக்கம் காட்டினர்.

ஏற்கனவே இதன் விலைகள் மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்ற கருத்து பரவலாக உள்ளது. இத்துடன் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு காரணங்களினால் பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவும், இந்நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை ரத்து செய்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் உலோக உற்பத்தி நிறுவனங்களின் பிரிவு குறியீட்டு எண் 414 புள்ளிகள் குறைந்தது. சுமால் கேப் 282, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 261.51, ரியல் எஸ்டேட் பிரிவு 246.48, மிட் கேப் 147.85 புள்ளிகள் குறைந்தன.

இதே போல் தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜீனியர் 227.55, சி.என்.எக்ஸ் ஐ.டி 0000 பாங்க் நிப்டி 143.45, சி.என்.எக்ஸ் 100-27.75, சி.என்.எக்ஸ் டிப்டி 21.30, சி.என்.எக்ஸ் 500- 40.25, சி.என்.எக்ஸ் மிட் கேப் 124.35, சி.என்.எக்ஸ் 50-56.65 புள்ளிகள் சரிந்தன.

இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது. 16 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

விலை அதிகரித்த பங்குகள ்:

நிறுவனத்தின் பெயர் பங்கு இறுதி விலை குறைவு

1) ஏ.சி.ச ி. ரூ.779.45 (ரூ.6.75).
2) பார்தி ஏர்டெல் ரூ.882.05 (ரூ.19.50)
3) சிப்லா ரூ.195.35 (ரூ.0.60)
4) ஹிந்துஸ் யூனிலிவர் ரூ.211.75 (ரூ.12.15)
5) ஐ.டி.சி ரூ.196.95 (ரூ.4.75)
6) மாருதி ரூ.803.85 (ரூ.5.10)
7) ஓ.என்.ஜி.சி ரூ.997.25 (ரூ.8.75)
8) ரான்பாக்ஸி ரூ.382.30 (ரூ.8.65)
9) ரிலையன்ஸ் கம்யூனி ரூ.646.10 (ரூ.2.05)
10) சத்யம் ரூ.410.00 (ரூ.19.15)
11) எஸ்.பி.ஐ. ரூ.2191.45 (ரூ.36.25)
12) டி.சி.எஸ். ரூ.899.95 (ரூ.17.00)
13) விப்ரோ ரூ.422.45 (ரூ.12.60)
14) இன்போசியஸ் ரூ.1551.35 (ரூ.70.45)

விலை குறைந்த பங்குகள் :

நிறுவனத்தின் பெயர் : இறுதி விலை : குறைவு

1) அம்புஜா சிமெண்ட் ரூ.116.35 (ரூ.1.00)
2) பஜாஜ் ஆட்ட ோ ரூ.2217.15 (ரூ.61.55)
3) பி.ஹெச்.இ.எல். ரூ.2013.70 (ரூ.6.20)
4) டி.எல்.எப் ரூ.816.70 (ரூ.28.15)
5) கிரேசம் ரூ.2801.95 (ரூ.17.05)
6) ஹெச்.டி.எப்.சி ரூ.2796.20 (ரூ.130.80)
7) ஹெச்.டி.எப்.சி வங்கி ரூ.1445.95 (ரூ.45.70)
8) ஹின்டால்கோ ரூ.160.50 (ரூ.2.80)
9) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ரூ.1066.70 (ரூ.38.55)
10) எல்.அண்ட்.டி ரூ.3527.30 (ரூ.103.15)
11) மகேந்திரா அண்ட்
மகேந்திரா ரூ.644.95 (ரூ.13.70)
12) என்.டி.பி.சி ரூ.203.30 (ரூ.3.10)
13) ரிலையன்ஸ் எனர்ஜி ரூ.1963.25 (ரூ.23.90)
14) ரிலையன்ஸ் இன்டஸ் ரூ.2421.75 (ரூ.3.25)
15) டாடா மோட்டார்ஸ் ரூ.711.15 (ரூ.3.75)
16) டாடா ஸ்டீல் ரூ.750.40 (ரூ.21.00)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

Show comments