Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (12:18 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது, குறியீட்டு எண்கள் அதிகரித்தன. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது. இதனால் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 83.14 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,610.07 ஆக அதிகரித்தது. (கடந்த இரண்டு நாட்களாக சென்செக்ஸ் சுமார் 1,150 புள்ளிகள் சரிந்தன என்பது குறிப்பிடத்தக்கத ு).

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 1.15 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 5132.10 புள்ளிகளாக அதிகரித்தது.

இந்த நிலை அதிக நேரம் நீடிக்கவில்லை. 10.15 மணியளவில் இரண்டு பங்குச் சந்தைகளிலும் பங்கு விலைகள் தொடர்ந்து குறைய ஆரம்பித்தன.

காலையில் 11.30 மணியளவில் சென்செக்ஸ் 21.38 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,505.55 ஆக இருந்தது.
நேற்று காலையில் சென்செக்ஸ் குறைந்தாலும், மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் காலையில் அதிகரித்தது. ஆனால் இன்று மற்ற பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன. மிட் கேப் 138.04, சுமால் கேப் 236.65, பி.எஸ்.இ 500- 57.72 புள்ளிகள் குறைந்தன.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 11.70 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5121.55 ஆக இருந்தது.
தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்ப பிரிவு, சி.என்.எக்ஸ் டிப்டி தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தது. அமெரிக்க பங்குச் சந்தையி்ன் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

டோவ் ஜோன்ஸ் 46.90,நாஸ்டாக் 14.28,எஸ்.பி.500-10.46 புள்ளிகள் அதிகரித்தது. ஆசிய நாட்டு சந்தைகளில் இரு வேறு நிலை காணப்பட்டது. சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் மாற்றம் இல்லை. தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 6.44 புள்ளிகள் அதிகரித்தது.

ஹாங்காங்கின் ஹாங்செங் 1,339.24, ஜப்பானின் நிக்கி 189.91,சீனாவின் சாங்காய் காம்போசிட் 67.35 புள்ளிகள் குறைந்து இருந்தது. பங்குச் சந்தையின் தொடர் சரிவுக்கு காரணம், அதிக அளவு பங்குகளின் விலையில் ஏற்ற இறக்கமாக இருப்பதால் பங்குகளில் முதலீடு செய்வதை பலர் தவிர்க்கின்றனர். இதனால் விலை குறைந்து வருவதாக மார்க்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்றைய காலை வர்த்தகத்தில் உலோக உற்பத்தி. ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. அதே நேரத்தில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் 2,004 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 433 நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தது.

இன்று முழுவதும் பங்குகளின் விலையில் ஏற்ற இறக்கம் தொடரும் என்று கருதப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments