Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை சரிவு!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (12:06 IST)
மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்டது.

சென்ற வெள்ளிக் கிழமை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1400 புள்ளிகள் அதிகரித்தது. ஆனால் இதற்கு நேர்மாறாக இன்று காலையிலேயே பங்குச் சந்தையில் எல்லா பிரிவு பங்குகளின் விலை குறைந்து குறியீட்டு எண் சரிந்தது.

காலை வர்த்தகம் தொடங்கிய சிறுது நேரத்தில் சென்செக்ஸ் 795.50 புள்ளிகள் சரிந்தது. இதே போல் நிஃப்டி 263.96 புள்ளிகள் குறைந்தது.

பங்குச் சந்தையில் பங்குகளின் விலைகள் அதிக அளவு உயர்வது பிறகு குறைவது என்ற போக்கு நிலவுகிறது. இதை கட்டுப்படுத்த செபி சில நடவடிக்கை எடுக்கப்போவதாக செய்திகள் கசிந்தன. அத்துடன் ரிசர்வ் வங்கி நாளை காலாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட உள்ளது.

அப்போது அமெரிக்க ரிசர்வ் வங்கியை தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதங்களை குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது போன்ற காரணங்களினால் பங்குச் சந்தையில் பங்குகளை விற்கும் போக்கு அதிக அளவு காணப்படுகிறது. இதுவே பங்குகளின் விலைகள் குறைவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

காலை 11.25 நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 714.22 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,647.44 ஆக இருந்தது. இதே போல் மிட் கேப் 244.58, சுமால் கேப் 274.58, பி.எஸ்.இ-500 289.73 புள்ளிகள் குறைந்து காணப்பட்டன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 245.65 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5,137.65 ஆக காணப்பட்டது. மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் 2.87 விழுக்காடு முதல் 4.74 விழுக்காடு வரை குறைந்து இருந்தன.

இந்தியாவில் மட்டுமல்லாது மற்ற நாட்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன.
அமெரிக்காவின் நாஸ்டாக் 34.72, எஸ் அண்ட் பி 21.46, டோவ் ஜோன்ஸ் 171.44 புள்ளிகள் குறைந்தது.

ஆசிய பங்குச் சந்தைகளில் சீனாவின் சாங்காய் காம்போசிட் 606.93, ஹாங்காங்கின் ஹாங்சாங் 1,185.41, ஜப்பானின் நிக்கி 541.25, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 147.24, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 65.22 புள்ளிகள் குறைந்தன. இதே நிலை இன்று தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments