பங்குச் சந்தை முன்னேற்றம்!

Webdunia
புதன், 23 ஜனவரி 2008 (14:11 IST)
மும்பை பங்குச் சந்தையும், தேசிய பங்குச் சந்தையும் காலையில் இருந்து தொடர்ந்து முன்னேறிக் கொண்டு உள்ளன.

காலையில் பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய போதே சென்செக்ஸ் 719.37 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 191 புள்ளிகளும் உயர்ந்து இருந்தது.

பிற்பகல் 1.30 நிலவரப்படி சென்செக்ஸ் 1,216.86 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,948.86 புள்ளிகளாக இருந்தது. மிட் கேப் 659.91, சுமால் கேப் 464.10, பி.எஸ்.இ-500 574.55 புள்ளிகள் அதிகரித்து இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 397.85 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5.297.15 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 1,014.85 புள்ளிகளும், சி.என்.எக்ஸ் ஐ.டி 218.25, பாங்க் நிஃப்டி 721.05, சி.என்.எக்ஸ் 100-409.15,சி.என்.எக்ஸ் டிப்டி 394.25, சி.என்.எக்ஸ் 500- 355.10, சி.என்.எக்ஸ் மிட் கேப் 597.15,
நிஃப்டி சி.என்.எக்ஸ் 50- 323.75 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் எல்லா பங்குகளின் விலையும் அதிகரித்தது.

இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் முடிவடைவதற்குள் மும்பை சென்செக்ஸ் 18 ஆயிரம் புள்ளிகளையும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 5,300 புள்ளிகளை எட்டிவிடும் என்ற எதிர்பார்ப்பு மார்க்கெட் வட்டாரங்களில் நிலவுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

விஜய்க்கு சிபிஐ சம்மன்!.. போனாலும் பிரச்சனை... போகலானாலும் பிரச்சனை.. தளபதி சமாளிப்பாரா?!...

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல்.. ஆளுநர் ரவியிடம் எடப்பாடி பழனிச்சாமி புகார்..!

சிறு வயதில் நிறைவேறாத காதல்: 60 வயதில் கரம் பிடித்த முதியவர்.. ஆச்சரிய தகவல்!

Show comments