Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ங்‌கு‌ச் ச‌ந்தை‌ : ஏ‌ற்ற இற‌க்க‌ம் தொட‌ர்‌கிறது!

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2008 (14:09 IST)
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று நிலைமை சீரடைந்துள்ளது.

பிற்பகல் 1.15 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 1240.85 புள்ளிகள் மட்டுமே குறைந்து இருந்தது. (நேற்று 1,408.35 புள்ளிகள் குறைந்த ன).

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 422.10 புள்ளிகள் மட்டுமே குறைந்து இருந்தது.(நேற்று 496.50 புள்ளிகள் குறைந்த ன).

இன்று காலை பங்குச் சந்தை துவங்கிய போது பங்கு விலைகள் கடுமையாக குறைந்த காரணத்தினால் இரண்டு பங்குச் சந்தைகளிலும் 1 மணி நேரம் வர்த்தகம் நிறுத்தப்பட்டது.

பிறகு காலை 10.55 மணிக்கு வர்த்தகம் மீண்டும் துவங்கியது. இரண்டு பங்குச் சந்தைகளிலும் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது.

அதே நேரத்தில் பங்குகளின் விலை ஒரே சீராக அதிகரி்க்காமல், ஏற்ற இறக்கமாக இருக்கின்றது.

மும்பை பங்குச் சந்தையும், அதே போல் தேசிய பங்குச் சந்தையும் பழை.ய நிலைக்கு திருமபவில்லை.

மும்பை பங்குச் சந்தையின் மற்ற பிரிவுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மிட்கேப் 898.25 சுமால் கேப் 1088.97, பி.எஸ்.இ-500 1,088.97 புள்ளிகள் சரிந்து இருந்தது.

தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்களும் குறைந்தன. இவை 5.94 விழுக்காடு முதல் 15.28 விழுக்காடு வரை குறைந்து இருந்தது.

ச‌ர்வதேச ‌நிலவர‌ம ்!

இந்தியாவில் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் பங்குச் சந்தைகள் அதிகளவு பாதிக்கப்பட்டன.

அமெரிக்க பங்குச் சந்தையின் டோவ் ஜோன் இன்டஸ்டிஸ்டிரிய‌ல் ஆவ்ரேஜ் 59.19 புள்ளிகளும், நாஸ்டாக் 6.88, எஸ்.அண்ட் பி-500 8.06 புள்ளிகள் குறைந்தன.

ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 752.89, ஹாங்காங்கின் ஹாங்சாங் 1,914.73, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 167.86 புள்ளிகள் குறைந்து இருந்தன.

ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசிய-பசிபிக் மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா உட்பட அந்நிய நாடுகளில் உள்ள எல்லா பங்குச் சந்தைகளிலும ் (‌ சி‌றிலங்கா தவி ர) பங்கு விலைகள் குறைந்து இருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments