Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தையில் மாற்றம்!

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2008 (13:14 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தையில் கடந்த இரண்டு நாட்களாக நிலவிய நிலைமையில், இன்று காலை 12 மணிக்கு பிறகு மாறியது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது சென்செக்ஸ் 104.64 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 19,972.75 ஆக இருந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 34.20 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5969.95 ஆக இருந்தது. ஆனால் அடுத்த ஐந்து நிமிடங்களிலேயே சென்செக்ஸ், நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளின் விலை குறைந்தது. இதன் விலைகளில் ஏற்ற இறக்கமாக இருந்தது. இதனால் இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் ஏற்ற இறக்கமாக இருந்தன.

இந்த நிலை 12 மணிக்கு மேல் மாறியது. மும்பை பங்குச் சந்தையில் 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 11.18 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 19,879.29 ஆக உயர்ந்தது.
இதே போல் மிட் கேப் 130.91,சுமால் கேப் 243.64,பி.எஸ்.இ-500 47.81 புள்ளிகள் அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 24.70 புள்ளிகள் உயர்ந்தது குறியீட்டு எண் 5960.45 ஆக இருந்தது. வங்கி பிரிவு தவிர மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்து இருந்தன.
அந்நிய நாட்டு பங்குச் சந்தைகளில் ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் சரிந்தன.

இன்று பங்குச் சந்தை ஒரே மாதிரியாக இல்லாமல் மாறுபடும் வாய்ப்பு உள்ளதாக மார்க்கெட் வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

Show comments