தங்கம் வெள்ளி விலை கிடுகிடு உயர்வு!

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2008 (19:26 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.11,625 ஆக அதிகரித்தது!

இதே போல் பார் வெள்ளியின் விலையும் கிலோ ரூ.20,850 ஆக உயர்ந்தது.

இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.180 உயர்நதது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.225 அதிகரித்தது.

இவற்றின் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்தது. இதனால் இந்தியாவிலும் உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதன் விளைவாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையும் அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க ரிசர்வ் வங்கி மேலும் வட்டி குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில், தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் சிங்கப்பூரி சந்தையில் இது வரை இல்லாத அளவிற்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 900 டாலராக அதிகரித்தது.

நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 898.30 டாலராக அதிகரித்தது. வெள்ளிக் கிழமை இறுதி விலை 895.70/896.50 டாலர்.

வெள்ளியின் விலையும் அதிகரித்தது. 1 அவுன்ஸ் வெள்ளியின் விலை 16.23/16.28 டாலராக இருந்தது. வெள்ளிக் கிழமை இறுதி விலை 16.19/16.24.

இன்று மாலை விலை விபரம ்:

24 காரட் தங்கம் 10 கிராம். ரூ.11,625 (சனிக் கிழமை 11,445)
22 காரட் தங்கம் 10 கிராம். ரூ.11,575 (11,395)
பார் வெள்ளி கிலோ ரூ.20,850 (20,625).
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

விஜய்க்கு சிபிஐ சம்மன்!.. போனாலும் பிரச்சனை... போகலானாலும் பிரச்சனை.. தளபதி சமாளிப்பாரா?!...

Show comments