Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தையில் மிட் கேப், சுமால் கேப் புள்ளிகள் உயர்வு!

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2008 (13:00 IST)
பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது, பங்குகளின் விலைகள் அதிகரித்தன. ஆனால் பங்குகளை வாங்குவதும், விற்பதும் என்ற நிலை தொடர்ந்தது. இதனால் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் தடுமாற்றம் காணப்பட்டது.

அதே நேரத்தில் மும்பை, தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்ப பிரிவு தவிர, மற்ற பிரிவுகளில் உள்ள பங்குகளின் விலைகள் அதிகரித்தன. சென்ற வாரம் முழுவதும் எல்லா பிரிவு பங்குகளின், குறிப்பாக சுமால் கேப், மிட் கேப் பங்குகளின் விலைகள் குறைந்தன என்பது கவனிக்கத்தக்கது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 90.78 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 20,918.23 ஆக உயர்ந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டியும் 38 புள்ளிகள் உயர்ந்தது. ஆனால் அதற்கு பிறகு சென்செக்ஸ் பிரிவில் உள்ள சில குறிப்பிட்ட பங்குகளின் விலைகளில் ஏற்ற இறக்கம் காணப்பட்டதால், இரு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் அதிகரிப்பது, பிறகு குறைவது என்ற போக்கில் இருந்தது.

காலை 12 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 47.64 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 20,779.81 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 8.80 புள்ளிகள் உயர்ந்து, குறியீட்டு எண் 6,208 ஆக இருந்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் மற்ற பிரிவில் உள்ள பங்குகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 88.82, சுமால் கேப் 169.03, பி.எஸ்.இ 500-42.38 புள்ளிகள் அதிகரித்து காணப்பட்டன.

தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்பம், சி.என்.எக்ஸ் டிப்டி தவிர மற்ற பிரிவு பங்குகளின் விலை அதிகரித்து இருந்தது. இன்று உணவு இடை வேளைக்கு பிறகு நிலைமை மாறலாம் என்று மார்க்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன ஒரு புத்திசாலித்தனம்? Password-யே பாஸ்வேர்டாக வைத்த 30+ லட்சம் இந்தியர்கள்! ஈஸியா ஹேக் பண்ணிடலாம்? - அதிர்ச்சி தகவல்!

எல்லோரும் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது.. விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

சென்னையில் ஞாயிறு வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

Show comments