Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம்!

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2008 (13:04 IST)
பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கி போது இருந்த நிலைமை, காலை 11 மணியளவில் மாற தொடங்கியது.

காலையில் வர்த்தகம் தொடங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 994.88 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 21,077.53 புள்ளிகளை தொட்டது (நேற்றைய இறுதி நிலவரம் 20,082.65).

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 52.75 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 6537.10 புள்ளிகளை தொட்டது.

பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கியவுடன் காணப்பட்ட உற்சாகம், சிறிது நேரத்திலேயே குறைய தொடங்கியது. வர்த்தகம் தொடங்கிய பதினைந்தாவது நிமிடத்திலேயே அத்கரித்த பங்குகளின் விலைகள் படிப்படியாக குறைய தொடங்கின.

காலை 11.20 நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 46.79 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 20,766.48 ஆக குறைந்தது. இதே போல் மற்ற பிரிவு பங்குகளின் விலையும் குறைய தொடங்கியது.

மிட் கேப் 204.19, சுமால் கேப் 336.62, பி.எஸ்.இ-500 82.38 புள்ளிகள் குறைந்தன. கடந்த சில நாட்களாக இந்கத பிரிவில் உள்ள பங்குகளின் விலைகள் தினசரி அதிகரித்து வந்தன. ஆனால் நேற்று முதன் முறையாக சுமால் கேப் குறியீட்டு எண் குறைந்தது. இன்றும் இந்த பிரிவு பங்குகளின் விலைகள் குறைந்து, குறியீட்டு எண்கள் குறைந்தன.

இதே போல் தேசிய பங்குச் சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கிய போது, நிஃப்டி 52.75 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 6,537.10 ஆக அதிகரித்தது. ஆனால் பிறகு சரியத் துவங்கியது. காலை 11.20 நிலவரப்படி நிஃப்டி 4.75 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 6274.35 ஆக குறைந்தது.
வங்கி நிஃப்டி, சி.என்,எஸக்ஸ் டிப்டி தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் அதிகாரபூர்வ புள்ளி விபரப்படி கடந்த முன்று தினங்களில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,100 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. அதே நேரத்தில் உள்நாட்டு நிதி மற்றும் முதலீட்டு நிறுவனங்களும், இதர பிரிவு முதலீட்டாளர்களும் ரூ.2,300 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று 21 ஆயிரத்தை தாண்டியது. (கடந்த வருடம் அக்டோபர் மாதம் 29 ந் தேதி 20,000 ஐ தாண்டியத ு)
இன்று முழுவதும் பங்குச் சந்தைகளில் எல்லா பிரிவிலும் உள்ள பங்குகளின் விலையில் மாற்றங்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?