Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை 341 புள்ளி உயர்வு!

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2008 (20:07 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு விலைகள் அதிகரித்தன. காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே இரண்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 341.69 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 20,686.89 ஆக முடிந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 95.75 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 6,274.30 ஆக முடிந்தது.

இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாமல ், ஆசியாவில் மற்ற நாட்டு பங்குச் சந்தை குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் மிட் கேப் 56.19 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 10,113.06 ஆக முடிந்தது.

சுமால் கேப் 12.60 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 13,884.11 ஆக முடிந்தது.

பி.எஸ்.இ-500 104.44 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 8,850.48 ஆக முடிந்தது.

தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில்நுட்ப பிரிவு தவிர மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

இன்று நடைபெற்ற வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் 1,470 பங்குகளின் விலை குறைந்தன. 1,437 பங்கு விலை அதிகரித்தன. 17 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமுமில்லை.

சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் 14 பங்குகளின் விலை அதிகரித்தது. 16 பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் டாடா ஸ்டீல ், பி.ஹெச்.இ.எல்., விப்ர ோ, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்க ி, பஜாஜ் ஆட்ட ோ, ஒ.என்.ஜி.சி., டி.எல்.எப்., ஹெச்.டி.எப்.சி., ஹெச்.ட ி,. எப்.சி. வங்க ி, ரான்பாக்ஸ ி, ஹின்டார்க ோ, எல்.அண்.டி., ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ ், ஹிந்துஸ்தான் யூனிலிவர ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகியவைகளின் பங்கு விலைகள் அதிகரித்தது.

மாருத ி, மகேந்திரா அண்ட் மகேந்திர ா, டி.சி.எஸ்., ஏ.சி.சி., அம்புஜா சிமென்ட ், இன்போசியஸ ், என்.டி.பி.சி., ரிலையன்ஸ் எனர்ஜ ி, டாடா மோட்டார்ஸ ், பார்தி ஏர்டெல ், என்.டி.பி.ச ி, எஸ்.பி.ய ை, சத்யம ், சிப்லா ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன ஒரு புத்திசாலித்தனம்? Password-யே பாஸ்வேர்டாக வைத்த 30+ லட்சம் இந்தியர்கள்! ஈஸியா ஹேக் பண்ணிடலாம்? - அதிர்ச்சி தகவல்!

எல்லோரும் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது.. விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

சென்னையில் ஞாயிறு வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

Show comments